நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

16.04.2026 16வது வாரம்
அப்போஸ்தலர் பவுலை புறக்கணித்த, கொரிந்தியர்கள்!

அப்போஸ்தலனாகிய பவுல் வாழ்ந்த காலங்களில் நடந்தது என்ன தெரியுமா? அவருடைய முதல் நிருபத்தை வாசித்த கொரிந்தியர்கள் “பவுலின் நிருபங்கள் பெலன் கொண்ட யோசனைகள்! மிகுந்த பலமுள்ளவைகள்!” என வானளாவ போற்றினார்கள். பின்பு, பவுல் நேரிடையாக கொரிந்து பட்டணத்திற்கு வந்து பிரசங்கித்த போது, பவுலைப் பார்த்த கொரிந்தியர்கள் “இது என்ன? இவனது சரீரத்தின் தோற்றம் பலவீனமாயுள்ளது! இவனது வசனிப்புகள் கவர்ச்சியாய் இல்லையே!!” (2கொரி.10:10) என, பவுலை உதாசீனம் செய்தார்கள். இதுபோன்ற கொரிந்திய சபை மனநிலைதான் இன்றைய சபைகளில் ஆக்கிரமித்திருக்கிறது. ஒரு பிரசங்கியை தங்கள் பிரசங்க பீடத்திற்கு அழைத்திடும் சபை “இந்த பிரசங்கியின் தோற்றமும், அந்தஸ்தும் மின்மினுங்கும் கவர்ச்சியாய் உள்ளது!” என்ற அடிப்படையிலேயே, தங்கள் சபையில் பேச அழைக்கிறார்கள்.
ஆனால், மின்மினிங்கிய அந்த பிரசங்கிகள் ‘இன்றோ’ பரிசுத்தத்தின் வைராக்கியம் ஒடுங்கி குளிர்ந்து போனார்கள்! அந்த பிரசங்கியல்ல, அவரின் வெளித்தோற்ற கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட ஜனங்களே வஞ்சிக்கப்படுகிறார்கள்!
- ரத்னம்
