நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
சபையின் அஸ்திபாரம் கிறிஸ்துவே! அது அவரிலே கட்டப்பட்டு அவரிலேயே வளரவேண்டும். அவரை இன்னாரென்று அறிந்தவர்களைக் கொண்டே, அவர் தமது சபையைக் கட்டமுடியும்! ஆகையால், தாம் உலகத்தைவிட்டுப் போகும் வேளை சமீபித்தபோது, பொதுவாய் பிரசங்கிப்பதை மாற்றித் தம்மையே பிரசங்கிக்கத் தொடங்கினார்! விசேஷமாய், தமது சீஷர்களோடு தனித்திருந்து அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தச் சித்தமானார். உலகம் அவரை அறியாமற்போனாலும் ‘சிலராகிலும்’ தம்மை அறிந்து கொண்டால், அவர்களைக் கொண்டு தமது சபையை ஸ்தாபித்து, அவர்கள் மூலமாய் உலகத்தை இரட்சிக்கலாம் என்பது அவரது திட நம்பிக்கையாய் மாறியது! பேதுரு பிரதியுத்தரமாக: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து!” என்றார். ஆண்டவருக்கிருந்த சந்தோஷத்துக்கு அளவில்லை. யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. அதாவது, உன் சுய அறிவினால் இதை நீ கண்டுகொள்ள வில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா, இதை உனக்கு வெளிப்படுத்தினார். நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்றார்!