நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
திருமணம்... என்றதும், மணமக்களுக்கு மேடையில் ஏறி புத்தி சொல்ல துடிப்போர் ஏராளம்! குறைந்தது, வாழ்த்து செய்தி கூற இச்சிப்போரும் ஏராளம்! பெரும்பாலும், அவர்களின் பேச்சு “மனுஷனுக்குரிய திராட்சரசம்.... அல்லது, மனுஷீக நற்பண்புகளேயன்றி” தெய்வீகத்தின் திவ்விய பண்புகளாய் இருப்பதில்லை!! ஆகவேதான், எந்த மனுஷனுக்குரிய நற்பண்பு களும், நாட்கள் செல்லச் செல்ல.... ருசி குறைந்து போகும்! (யோவான்.2:10).
ஆனால் இயேசுவோ, கானாவூர் கலியாணத்தில், ‘பேச்சில் அல்லாமல்’ தெய்வீக பண்புகளைப் பெறுவதை, செய்து காண்பித்தார்! அந்த செயல், மணவாளனின் காதில் ஒலிக்கும் செய்தியாய் சேர்ந்துவிட்டது (யோவான்.2:9). அந்த செய்தி, திருமணத்திற்குப் பிறகும் 20 வருடம், 30 வருடம் அல்லது 40.... 50 வருடம் திருமண வாழ்விலும் “இதுவரைக்கும் நிலைத்து நிற்கச்செய்யும்” ருசி குறையாத இயேசுவின் மகிமை என்பதை அறிந்து பரவசம் கொண்டான்! இயேசுவின் சீஷர்களும், இந்த “இயேசுவின் மகிமை” நிறைந்த வாழ்வை விசுவாசித்தார்கள்! (யோவான்.2:11).
ருசியற்ற தங்கள் சுயத்தை, இயேசு கட்டளையிட்டபடி, ஒருவன் தன் சிலுவையில் மரணத்திற்கு ஊற்ற ஊற்ற...... மதுரம் குறையுமோ? அல்லது கூடுமோ? ஆம், நிச்சயமாய் கூடும்!