நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
13.03.2025
11. வெறுப்பின் நடுவில் மலரும் அன்பின் நற்கந்தம்!
மேடம் குயானாகிய நான், வேலையெல்லாம் ஒழுங்கு செய்து முடித்த பிறகு, தனியே ஜெபிக்கும்படி என் அறைக்கு சென்றதும், என் வேலைக்கார பெண்மணி என் கணவரிடம் ஓடோடிச் சென்று “பாருங்கள் உங்கள் மனைவி ஒரு வேலையும் செய்யாமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு செல்கிறார்கள்!” என கோபத்தோடு புகார் செய்தாள்.
சிறிது ஓய்வுக்குப் பின்பு நான் மெயின் ஹாலுக்கு திரும்பியதும், என் கணவர் கொடிய வார்த்தைகளை கோபத்தோடு பேசி, என்னை அடித்து துன்புறுத்தவும் செய்தார். நானோ உண்மையான காரணங்களை எடுத்துக் கூறினேன்.... அதற்கு அவர் ‘அத்தனையும் பொய்’ என சாடிவிட்டார். அந்த கோப நேரத்தில் என் மாமியார் குறுக்கிட்டு, “இவளால் நமக்கு எல்லாமே நஷ்டம்தான்! மகனே, நான் உன்னை பாதுகாக்கவில்லையென்றால், நீ அழிந்தே போயிருந்திருப்பாய்” என பரிவோடு என் கணவரிடம் பேசி, அவரது ஆத்திரத்தை இன்னமும் தூண்டிவிட்டார்கள்.
கூறப்பட்ட அனைத்தையும் என் கணவர் அப்படியே நம்பினார். நான் செய்ய அறிந்ததெல்லாம், முழுமையான பொறுமையோடு, அனைத்தையும் சகித்துக் கொண்டு, என் கடமையை அன்போடு நிறைவேற்றுவதே தேவபக்திக்குரியது என கண்டேன்!
(மேடம் குயான் வாழ்க்கை சரிதை)