வீட்டிற்கு வரும் உறவினர் அல்லது விருந்தாளிகளிடம் அல்லது நம் சகோதர சகோதரிகளிடம் ‘இனிய’ வார்த்தைகளைப் பேசி ‘புன்னகை’ முகம் காட்டும் நாம், நம்மோடு பலகாலமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடமும், கணவரிடமும், பிள்ளைகளிடமும்.... இன்முகம் காட்டி இனிய வார்த்தைகளைப் பேசுவதில்லையே?!
அல்லது, உறவினர் வீட்டில் இருக்கும்போது கணவரிடமும் மனைவியிடமும் இன்முகம் காட்டி இனிய வார்த்தைகளைப் பேசிய நாம், உறவினர் சென்றவுடன் முகபாவனை மாறி கடுஞ்சொல் பேசுகிறோமல்லவா?!
இவ்வாறெல்லாம் நடந்து, நம் மனைவி, புருஷன், பிள்ளைகள், அலுவலகத்திலுள்ளவர்கள், உற்றார் உறவினர்கள்..... போன்ற அனேகரை நாம் எவ்வளவாய் மனம் நோக வைத்து தீமை செய்துவிட்டோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வித நம் செயல், நம் ஆவியில் உள்ள தரித்திரத்தையே நமக்குச் சுட்டிக்காட்டுகிறது! நாம் துயரம் கொண்டு, இருதயத்தின் ஆழத்தில் மனம் திரும்பக்கடவோம்!