நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
05.08.2021 | 8. உலகத்தைப் பிரித்து வாழும் வல்லமை ‘சிலுவைக்கு’ மாத்திரமே உண்டு! |
சபை மாந்தரே கேளுங்கள்: “நம் சபைகளை சீயோன் பர்வதத்தில்” கட்டுவோமாக! இந்த உலகத்தை துணிவுடன் ஏறிட்டு நின்று ‘உலகமே! நாங்கள் நிற்கும் பர்வதம் ஏறி வாருங்கள்!’ என்றே அழைப்பு கொடுப்போமாக! இதற்கு மாறாக ‘எவ்வித கொடிய சூழ்நிலையிலும்’ உலகத்திற்குள் நாம் இறங்கிவிடாதிருப்போமாக! நம் கிறிஸ்தவத்தின் சிங்காரமே சிலுவைதான்:
அந்த சிலுவையின் முழக்கமோ, மரித்து வாழுங்கள்! பிரிந்து வாழுங்கள்! ஒருபோதும், ஒருபோதும் ஒத்தவேஷத்திற்கு சமரசம் சேராதிருங்கள்! என்ற முழக்கமேயாகும். சிலுவையைக் கண்டடைந்தவர்களில் ஒருவர் கூட, ஒத்த வேஷத்திற்கு தாழ்ந்தது இல்லை!!
மெய்யான சிலுவை, ஜீவனுக்கும் மரணத்திற்கும் உறுதியான பிளவை ஏற்படுத்தும். இதை காணும், பயந்து வாழும் கோழைகள் “இது அதிக பட்சம்!” எனக் கூக்குரலிடுகிறார்கள். கோழைகளின் இந்த கூக்குரல், மெய்யாகவே சரிதான். ஏனெனில், இந்த பாருலகில் சிலுவை மாத்திரமே அதிகபட்சத்தின் உச்சக்கட்டம்! இதைத்தவிர வேறொன்றல்ல, சிலுவையே முடிவானது!