பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

09.05.2024

19. ‘தெய்வ தாகம்’ இச்சையாகாது, அது நித்திய ஜீவன்!

  சையே’ எல்லா துன்பத்திற்கும், துயரத்திற்கும் வேராயிருக்கிறது என சிலர் கூறுகிறார்கள். இதை உண்மை என்று ஏற்றுக்கொள்வோமென்றால், ‘எல்லா ஆசைகளையும்’ அழிப்பதே மெய்யான இரட்சிப்பு என நாம் கூறிவிடக்கூடும். அப்படியிருக்குமென்றால் எத்தனையோ நன்மையான விருப்பங்களையும் அகற்றிவிட வேண்டும் என பொருளாகும். அப்படியானால், நித்தியத்திற்குரிய நமது ஏக்கம் மிகுந்த விருப்பமான ‘தேவனை முகமுகமாய் சந்திப்போம்’ என்ற இனிமையும், ‘நித்திய பேரின்பத்திற்குள் நுழைவோம்’ என்ற மகிழ்ச்சியான விருப்பமும் அகற்றப்பட வேண்டுமே!? ஒருவர் தாகமாயிருந்தால், “உன் தாகத்தைக் கொன்று விடு” என்று கூறாமல்.... அவருடைய தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்து உதவுகிறோம்! 

  உயிர்தரும் தண்ணீரைத் தந்து ஒருவனுடைய தாகத்தை போக்காமல், ‘தாகத்தை’ விரட்டியடிக்கலாம் என எண்ணுவது..... ‘ஜீவனையே’ விரட்டியடிப்பதற்கு சமமாகும். 

  இதன் விளைவு, மரணமாயிருக்கலாம்! அது இரட்சிப்பு அல்ல! “எனக்கு தண்ணீர் தேவை!” என்பதை வெளிப்படுத்தும் அறிகுறியே தாகமாகும். மேலும், இந்த தாகம், எங்கோ தண்ணீர் இருக்கிறது என்பதையும், அது தன் தாகத்தை போக்கி திருப்திப்படுத்தும் எனவும் காண்பிக்கிற “நம்பிக்கையின் அடையாளமாயும்” இருக்கிறது!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!