பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
11.12.2021

பூரண ‘அர்ப்பணத்தை’ சார்ந்தே பரிசுத்தாவி அபிஷேகம்!

image

பூரண அர்ப்பண வாழ்க்கை என்பது, தேவன் வைத்திருக்கும் ஓர் தராசு எடை மேடையைப் போன்றதாகும்! இந்த தராசின் இணைப்பு பரலோகத்தோடு தொடர்புடையதாகும். அந்த தொடர்பு, ஒரு உத்தம விசுவாசிக்கு தேவன் தரும் “அபிஷேகம்” (Anointing)  என்ற சொல்லொண்ணா ஆசீர்வாதத்தின் பொக்கிஷ மேயாகும். இந்த பூரண அர்ப்பண தராசு, ஒருவனின் முழுமையான, துல்லிய எடையை காட்டும் ஓர் ஆவிக்குரிய மெஷின் என்றே கூறவேண்டும்! ஆகவே, ஒருவன் பரத்தின் ‘அபிஷேகத்தைப்’ பெறவேண்டுமென்றால், அவனுடைய முழு எடையும் (பூரண அர்ப்பணம்) அந்த தராசில் வரவேண்டியது மிகமிக அவசியம். ஒரு மனிதனின் எடை 61.5 கிலோகிராமாக இருந்தால், அவன் அந்த தராசில் 61 கிலோ கிராம் எடையைப் பதிவுசெய்தால், அதினால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீங்கள் ஒருவேளை .5 மாத்திரம்தானே பதிவாகவில்லை என கூறுபவர்களாயிருந்தால், அவ்வாறு கூறிக் கொண்டேயிருங்கள்.... பரத்தின் ‘வருகை’ எதுவுமே சம்பவிக்காது! ஒருவனின் “ஜீவிய-எடை” எவ்வளவு என்பது தேவனுக்குத் துல்லியமாய் தெரியும். பரத்தின் ஆசீர்வாதத்தை தேவன் முழுமையாக தர விரும்புகிறபடியால், அவர் தன்னிடம் வருபவன் “முழுமையாய்” தன்னை தரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்!! 

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!