பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
14.09.2023  

14. ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு (ஒரு கொல்லனின் அறிக்கை)

   
                                                                       

தேவன் தமது பிள்ளைகளின் வாழ்வில் துன்பங்களை ஏன் அனுமதிக்கவேண்டும் என்றதோர் கேள்வியை அவிசுவாசியான ஒரு மனிதன், தேவ பக்தியாய் ஜீவித்ததோர் கிறிஸ்தவக் கொல்லனிடம் சவாலாக முன்வைத்தான்!

அந்த அவிசுவாசிக்கு அக்கிறிஸ்தவக் கொல்லன் கீழ்கண்டவாறு மாறுத்தரம் அளித்தான்:

“நான் ஒரு சிறிய இரும்பு துண்டை எடுத்து, அதை நெருப்பில் வைத்துப் பழுக்கக் காய்ச்சி எடுத்து, பட்டறைக் கல்லில் வைத்துப் பதமாக்கி, நன்கு அடிக்கின்றேன்! பின்னர் அதை தண்ணீரில் போட்டு வெப்பநிலையை மாற்றி, மீண்டும் நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சி எடுத்து, நன்கு அடித்து மிகவும் பயனுள்ளதோர் பொருளை அதிலிருந்து உருவாக்குகின்றேன்!!

பழுக்கக் காய்ச்சிப் பட்டறைக் கல்லில் வைத்து நான் முதன் முறை அடிக்கும்போதே, அது பக்குவமாகக் காணப்படாவிட்டால், நான் உடனே அதை உலோகக் கழிவுத் தொட்டியில் வீசி எறிந்து விடுகின்றேன்!

 “நான் பக்குவமடைகின்றேனோ என்பதனைப் பரிசோதிக்கவே தேவன் என்னைத் துன்பத்தில் புடமிடுகின்றார்” என்று நான் விசுவாசிக்கிறேன். தேவ ஆவியின் துணையோடு என் பாடுகளை நான் மிகவும் பொறுமையுடன் சகிக்கின்றேன்.

நான் நாள்தோறும் ஆண்டவரை நோக்கி “ஆண்டவரே, உலைக்கள அக்கினி எனக்கு அவசியம் என்று நீர் கருதும் பட்சத்தில், நெருப்பில் வைத்து என்னைக் காய்ச்சும்! நீர் என்னை எதுவேண்டுமானாலும் செய்யும். ஆனால்....ஓ என் அன்புள்ள ஆண்டவரே, எந்நிலையிலும் என்னைக் கழிவுப் பெட்டியில் மாத்திரம் ‘ஒன்றுக்கும் பயன்படாது’ என்று வீசி எறிந்து போடாதேயும்!” என்றே ஜெபிக்கின்றேன் என்று அக்கொல்லன் “துன்பத்தில் தேவ நோக்கத்தை” பதிலாய் கூறினான்.


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!