பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
08.07.2021

7. பெற்ற அபிஷேகம் இழப்பது துயரம்!

image

தேவனுக்கென்று நசரேயனாயிருந்த சிம்சோனின் தலையில் சவரக்கத்தி படவேகூடாது! என உரைக்கப்பட்டதின் முகாந்திரம், ‘கர்த்தரின் ஆவி அவன் மேல் வல்லமையாய் நிலைத்திருக்க வேண்டும்’ என்பதேயாகும். சிம்சோன் என்று தன் தலைமுடியை இழக்கிறானோ, அன்றே கர்த்தர் அவனைவிட்டு விலகிவிடுவார் என்பதை சிம்சோனும் அறிந்திருந்தான்! (நியா.13).

சோதனை வேளையில் “நாம் பாவத்தில் வீழ்வது” நம் அபிஷேகத்தை இழக்கும் சோகமேயாகும்! ‘வேசித்தன பாவம்’ சிம்சோனின் தலைமுடியை சிரைத்து, அவனது அபிஷேகத்தை பறித்து விட்டது! இன்றும் புதிய உடன்படிக்கை ஜீவியத்தில், ‘வேசித்தனத்தின் மடியில்’ பரிசுத்தாவியின் பெலனையும், தங்கள் சிரசின்மேல் தங்கியிருந்த ‘ஆனந்த தைலத்தையும்’ இழந்த சிம்சோன்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்! சிம்சோனை ஒப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் “இவர்களின் தலைமுடி சிரைக்கப்பட்டது!” என்றே கூற வேண்டும்! அதுபோலவே, யாரோ நமக்குச் செய்துவிட்ட சில தீமைகள், பரிகாசங்கள் அல்லது ஏற்பட்ட அவமானங்கள், நம் தலைமுடி சிரைக்கப்பட ஒப்புக்கொடுப்பது சரிதானோ? யார்யாரோ அல்லது எந்தந்த சூழ்நிலைகளோ “என் பெலனாகிய அபிஷேகத்தை” சிரைத்துவிட அனுமதித்திட கூடவே கூடாது!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!