பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

09.10.2025

41. ‘அவனவன் தன் சிலுவை’ எடுப்பதே, மிக எளிது!

  மது ஆண்டவர் சகித்த சிலுவை என்ன? என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த உலகத்தில் வாழ்ந்த ஒருவர்கூட “அவருக்கு ஒப்பான சிலுவையின் அனுபவத்தை அடைந்திடவில்லை”. மேலும், “கிறிஸ்து பாடுபட்டு மரித்த சிலுவை, அவர் மனுக்குலத்திற்காக அனுபவித்த விசேஷித்த அனுபவமாகும்”. 

அவருடைய சிலுவை, ‘இந்த உலகத்திற்கே ஜீவன் தரும்படி’ அனுபவித்த சிலுவையாகும்:

    1. அந்த சிலுவையில் பாவத்தை சுமந்தார்.
    2. அந்த சிலுவையில் இருளை அகற்றினார்.
    3. தான் பரிசுத்த பலியாவதற்கு, பிதாவினால் புறக்கணிக்கப்பட்டார்.
    4. சொல்லொண்ணா வேதனைகளை நமக்காக அனுபவித்தார்!

 அப்படியிருக்க, கிறிஸ்துவின் சிலுவை அனுபவத்தை நானும் அடைய முடியும் என ஒருவன் எண்ணுவது “புனிதம் புரியாத தியாகமாகும்”. நாம் நாள்தோறும் எடுக்கும் சிலுவை, மரணத்தின் ஆயுதமேயாகும்! நற்செய்தி என்னவென்றால், “பிறர் சுமந்து வரும் சிலுவையில், நீங்கள் மரித்திட அழைக்கப்படவில்லை” என்ற விடுதலையான சுயாதீனமேயாகும். அன்று கொல்கொதாவில் “இயேசுவின் சிலுவையை” சிரேனே ஊர் சீமோன் சுமக்க முயற்சித்ததை தேவன் மறுத்தார் (லூக்கா 23:26). “அவனவன்.... தன் சிலுவையை எடுத்து, அவரைப் பின்பற்றக்கடவன்” என்ற அழைப்பை உங்களின் சொந்த நற்செய்தியாய் மனதார பற்றிக்கொண்டு வாழுங்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!