பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


16.05.2024

20. ‘தலை கீழாய்’ மாற்றி நடக்கும் கிறிஸ்தவ கூட்டத்தாரா நீங்கள்?


 இந்த உலகத்தால் கறைபட்டு வேஷம் தரிப்பவர்கள் ‘ஆகிலும்’..... என விசுவாச உறுதியிழந்து உலகத்தின் இழுவைக்கு உட்படுகிறார்கள்! அல்லது ‘இப்படியிருந்தால்....’ இந்த உலகில் எப்படி முடியும்? என சாக்கு போக்கு சொல்லுகிறார்கள்! ‘நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க வேண்டாம்!’ (ரோமர்12:2) என வேதம் கட்டளையிட்டால், அதுவே முதலும் முடிவுமானது. பின் எதற்கு ‘ஆகிலும்....’ என தயங்கி உலகத்திற்கு வழிவகுக்கிறீர்கள்?

 வேதம் கட்டளையிடுகிறபடி “நீங்கள் தலையாயிருங்கள்..... ஒத்த வேஷத்தில் தேய்ந்து போகும் வாலாய் மாறாதிருங்கள்! உலகத்தின் போக்கில் கீழே சரிந்து விழாமல், எப்போதும் உன்னதத்தின் மீது மேலான சிந்தை கொண்டிருங்கள்!” என எத்தனை ஆணித்தரமாய் உபா.28:13-ல் நமக்கு கட்டளைக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 தேவனுடைய அனைத்து வார்த்தைக்கும், கற்பனைக்கும், தனிப்பட்ட விசுவாசத்தின் முழு சுதந்திரத்தோடு எழுந்து நின்று, முற்றிலும் கீழ்படிதலுள்ள வாழ்க்கையை மாத்திரம் நாடுங்கள். களங்கமற்ற தேவனுடைய வார்த்தைகள் மாத்திரமே, நம் ஜீவியத்திற்குரிய அனைத்து ‘பூரணத்தையும்’ தந்திட முடியும்!

 இன்றைய கிறிஸ்தவ உலகத்தை ஏறெடுத்துப் பாருங்கள்! ‘மனம் மாறிய மாந்தர்கள்’ என கூறிக்கொண்ட விசுவாசிகளில் பலர், இந்த உலகத்திற்கே மீண்டும் தலைகீழாய் மாறி ‘கோணலான’ நடை நடக்கிறார்கள்! இவர்கள் சம்பாஷணையை பாருங்கள். “ஓஹோ, இதுதான் உலகத்தின் வழக்கமோ? அப்படியானால் சரி சரி!!” என்றும் “இதுவே, உங்கள் உலக பாரம்பரிய பழக்கமோ? அப்படியே ஆகட்டும் சரி சரி!” என்றும், ஒத்தவேஷ தாளமிடுகிறார்கள். தேவனுடைய கற்பனைகளை தலையாய் வைத்து நடப்பவன் மாத்திரமே, கறை படிந்த இந்த வேஷதார கூட்டத்திற்கு தன்னை ஒப்புக்கொடாமல், ஓங்கிய சுதந்திரத்துடன், வீறு கொண்ட நேர் நடை போட்டு, கர்த்தரை மகிமைப்படுத்துவான்! இவன் வால் அல்ல, தலையாய் நிற்பவன்!!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!