நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
03. நமக்கிருப்பது, பன்றிகளின் மேய்ப்பனா? ஆடுகளின் மேய்ப்பனா? |
மலைப்பிரசங்கத்தில் ‘கோபம்’ கொண்டவனை நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாய் ஆரம்பித்து, பின்பு ‘வீணன்’ என கோபத்துடன் கூறியதால் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு அவன் வந்து சேர்ந்து, பின்பு ‘மூடனே!’ என கோபக்கனலை கக்கிய பின்பே ‘இப்போது இவன்’ எரி நரகத்திற்கு ஏதுவாயிருக்கிறான்!! என இயேசு கூறினார்! (மத்.5 : 21, 22). ஆனால், ஒரு ஸ்திரீயை ‘இச்சையோடு பார்க்கிற’ எவனும்.... உடனடியாக எரிநரகத்திற்கு தள்ளப்படும் அபாயத்தை இயேசு எச்சரித்தார்! (மத்.5 : 28, 29). ஏனெனில், ‘அதே கணத்தில்’ அவன் இருதயத்தில் அங்கு விபச்சாரம் நடந்தேறிவிட்டது என இயேசு அறிவித்தார்!! இந்த வசனங்களை வாசிக்கும் ஒரு இளைஞன் அல்லது ஒரு யுவதி “அடடே! இதுவே தூய தெய்வீக பரிசுத்தம்!” என மகிழ்ந்து கொண்டாட வேண்டும்! ஆம், அசுத்த பன்றிகளின் மேய்ப்பன் கரத்திலிருந்து விடுதலையாகி, ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பனான இயேசுவின் கரத்திற்கு வந்த “ஆட்டுக்குட்டிகளே” ‘இந்த தெய்வீக தூய்மைக்கு’ இயேசுவை தங்களது ஒப்பில்லாத குருவாய் கண்டு மகிழ்வார்கள்!