நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
01.05.2025
18. என் இரட்சிப்பில் அக்கறை கொண்டு நடத்திய தேவன்!
என் படிப்பு உதவிக்காக நியமிக்கப்பட்ட நல்ல ஒரு கிறிஸ்தவ பெண்மணி மிக அருமையாக எனக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்கள். மேலும் அவர்கள் அடிக்கடி ஜெபிப்பதையும் நான் கண்டு பரவசமடைந்தேன். தேவன் மீது அப்படியொரு அலாதி விசுவாசம் கொண்டிருந்தார்கள்! நான் கல்வியில் மிக நேர்த்தியாய் தேறி வந்தேன். என்னிடம் எந்த கேள்வி கேட்டாலும் நான் பிழையில்லாது பதில் சொன்னதைக் கண்ட ஆசிரியர்கள், மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள். ஒரு முறை என் தந்தையின் வீட்டுக்கு நான் சென்றபோது “இங்கிலாந்து ராணி அம்மையார்”அங்கு வந்திருந்தார்கள்! என்னை ராணியிடம் அழைத்து சென்ற என் தந்தை “கனம் பொருந்திய ராணி அவர்களே, என் மகளிடம் சில கேள்விகளை கேட்டுப்பாருங்கள், உங்களின் எந்த கேள்விக்கும் அவள் பதில் தருவாள்” எனக் கூறினார். அப்போது எனக்கு வயது எட்டு! பல கடினமான கேள்விகளை ரணி அம்மையார் கேட்டாலும் உடனுக்கு உடன் பதில் கூறினேன்.
அதைக் கண்டு வியந்த இங்கிலாந்தின் ராணி அம்மையார், “என்னை இளவரசியைப் போல்” தன்னிடம் வைத்துக்கொள்ள அழைத்தார். அதற்கு என் தந்தை மறுத்துவிட்டார்! மெய்யாகவே இது தேவனுடைய வழியாகவே இருந்தது. ஒருவேளை நான் அங்கு சென்றிருந்தால், நான் இரட்சிப்படைந்திருக்க மாட்டேன்!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)