பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
16.05.2019

6. ‘ஆழத்தின் அழைப்பு’ புறக்கணிக்கப்படும் காலம் இது!

image

விண்ணின் ஆசீர்வாதத்திற்கல்ல, மண்ணின் ஆசீர்வாதத்திற்கு வலைவீசிடவே மாந்தர்கள் இன்று, துடித்து நிற்கிறார்கள்! ‘உள்ளான மனுஷனின்’ மனக்கண்கள் திறவாமல், கிறிஸ்துவின் ஐசுவரியத்தைக் காண்பதும் கூடாதே! ஆழ்ந்த ஜீவியத்தின் ஆர்வம் இல்லாமல், “அளக்க முடியாத தெய்வ அன்பை” அள்ளி குவித்திடவும் இயலாதே!! ஆழம் அழைக்கிறது! என வேதம் அறைகூவினாலும்... ஆழம் சென்று வலைவீசிட முடியாத ஆவிக்குரிய தூக்கத்தையும், சோம்பலையும் சத்துருவானவன், விசுவாசிகளிடம் என்றும் இல்லாத அளவிற்கு இன்று விதைத்து விட்டான்!

குருவைப்போல் ‘ஆத்தும ஆதாய’ ஊழியத்திற்கு, ஜனங்களிடம் வலைவீசும் ஊழியமும் இன்றில்லையே! ஜனங்களின் பணத்தை குறிவைத்து ‘காணிக்கை’ என்ற பெயரில் வலைவீசும் ஊழியமே, சபை தொடங்கி.... கூ.ஏ ஊழியம் வரை செழித்து ‘சீரழிந்து’ வருகிறது! பணத்தோடு, தங்கள் பெயர் பிரஸ்தாப கனத்திற்கும் வலைவீசும் கொடிய காலம்! தேவ இராஜ்ஜியம், கடலில் வலைவீசும் வலைக்கு ஒப்பாய் இருக்கிறது என்பதெல்லாம் ஒழிந்து “சுய இராஜ்ஜியம்” தேடி வலைவீசும் மாந்தர்களே ஏராளம்! (மத்தேயு 13:47). ஆகிலும், விண்ணின் ஜீவியமும் ஊழியமும் இல்லையே என ஏங்கும் “ஆவிக்குரிய ஏழ்மை” பெற்ற மீதியான தமது ஜனங்களையும் இப்பூமியில் வைத்திருக்கிறார்! இவர்களே, விண்ணின் ஜீவியமும் ஊழியமும் பெற்று ஆனந்திப்பார்கள்! இவர்களுக்கே “பரலோக இராஜ்ஜியம்” என இயேசுவும் அகமகிழ்வார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!