பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

14.052026                                                              20வது வாரம்

‘தெய்வ அன்பில்’ பழகி வளருங்கள்!

 ன்பே பிரதானமானது’ என நாம் அறிந்திருக்கிறோம். தேவனை அன்புகூருவதும், பிறரை அன்புகூருவதும் ஆகிய இந்த அற்புத செயல் நம்மில் ஒருவருக்கும் தூரமானது அல்ல. அது ஏனென்றால், நம் எல்லோருக்கும் இருதயம் உள்ளது! இருதயம் இல்லாமல் ஒருவரும் வாழ இயலாது. அதுபோலவே, அன்பில்லாத இருதயமும் பிழைத்திருக்க இயலாது!

 ‘உயிரைப் போன்று உள்ள அன்பை’ நான் ஏன் நாடி வாஞ்சிக்க வேண்டும்? என ஒருவன் கேட்பது தகுதியான கேள்வி அல்ல. யாதொரு கேள்வியும் கேட்காமலே, பிறரிடம் அன்புகூர நாம் பழகுவோமாக. மெய்யான அன்பிற்கு முன்பாக ‘காரணங்கள்’ நிலை நிற்பதில்லை. நான் ஏன் அன்புகூர வேண்டும்? என்ற முட்டுக்கட்டை போடும் காரணங்கள் விலகி விட்டால், தேவ அன்பு நம்மை நிறைத்துவிடும்! இவ்வாறு மிக எளிய விதத்தில் அன்புகூர முயற்சித்துப் பாருங்கள். அப்பொழுது, ஒரு ‘தத்துவ ஞானி’ கூட அடைந்திட முடியாத மேன்மையை நீங்கள் அடைந்திடுவீர்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!