பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
05.09.2019

9. தனி ஜெபமின்றி, ஜெயவாழ்வு இல்லை!

image

தன் ஆத்துமா கலங்கிய வேளையில், தன் சீஷர்களோடு ஜெபித்திட இயேசு கெத்சமனே சென்ற போதிலும் கல்லெறி தூரம் விலகி, தனித்தே ஜெபித்தார். தன் பிதாவை சந்தித்து, சுய சித்தம் ஒழித்து.... கெம்பீரமாய் கொல்கொதா மலையேறி வெற்றி சிறந்தார்! (லூக்கா 22:41,42).

தனிமையில், தேவனை ஜெபத்தில் சந்திக்காத கிறிஸ்தவ வாழ்வில் ஜெயம் இருப்பதில்லை. “இவ்வகை பிசாசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறு எவ்விதத்தினாலும் புறப்பட்டு போகாது” என்றார் இயேசு (மத்தேயு 17:21). மிகுதியான நளத தைலத்தை சில செத்த ஈக்கள் நாறச் செய்துவிடும் (பிர.10:1). மேலும் “இதோ உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என இயேசு கூறினார்! (யோவான் 14:30).

ஆகவே, உங்கள் ஜீவியத்தில் ஒரு பாவம் ஜெயிக்கப்படாமல் இருந்தாலும், அது தோல்வியின் ஜீவியம் என்பதை மறந்து விடாதீர்கள். பாவத்தை ஜெயித்து வாழாமல், தெய்வ கிருபையின் ஆளுகையில் இருப்பதை நாம் நிரூபித்திட முடியாது. முற்றிலும் ஜெயம் என்பதே பரலோக ராஜ்ஜியத்தின் நிரந்தர தரமாகும் (ரோ.8:37). ஆகவே இயேசு தனிமையில், பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் ஜெபித்திட்ட ஜீவியம் நமக்கு இராவிட்டால் ஜெய வாழ்வு இல்லை! அதை அறிந்து, ஜெபமாந்தர்கள் நிறைந்த சபையாய் நாம் திகழ்வோமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!