நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
09.01.2020 | 1. ‘இயேசு போல’ மாற்றும் சீஷத்துவ சுவிசேஷம்! |
“பிதாவின் பூரண சற்குணமே” இயேசு வழங்கும் பூரண சுவிசேஷம்! குருவை ஆசையாய் பின்பற்றும் நாம், அவர் பரிசுத்தராய் இருக்கிறதுபோல.... பிதா இரக்க முள்ளவராய் இருக்கிறதுபோல.... பிதா குமாரனோடு ஒன்றாயிருக்கிறது போல..... நீங்களும் பரிசுத்தராய்! நீங்களும் இரக்கமுள்ளவர்களாய்! நீங்களும் அவரோடு ஒன்றான ஐக்கியம் கொண்டவர்களாய்! வாழ்ந்திட முடியும் என்றல்லவோ கெம்பீரமாய் அழைக்கிறது!! “அவரைப்போல் மாறும்” இந்த பாக்கியம், பரம பிதாவை “என் பிதா!” என அழைக்கும் சுதந்திரவாளிகள் அனைவருக்கும் சொந்தமானது!!
‘நம்மை போலவே’ நன்மை ஏதும் இல்லாத மாம்சத்தில் வந்த இயேசுவின் அனாதி தீர்மானம் “அவரைப்போலவே” நாமும் மாறிட வேண்டும்! “அவரைப் போலவே” அனேகம் குமாரர்கள் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டும்! என்ற கெம்பீர சுவிசேஷ நோக்கமேயாகும்!
இன்றைய திரளான விசுவாசிகள் இன்னமும் ‘சீஷர்களாய்’ மாறாதபடியால் “அவர் நடந்தது போலவே தானும் நடக்க வேண்டும்” என்ற விழிப்பை அனேகர் பெறவில்லை! ‘அன்று’ சீஷர்களாய் நடந்தவர்களில் அனேகர்..... ‘இன்று’ வழிதப்பி போவதும் சகஜமாகிவிட்டதே!? சிலுவை எடுத்து அவர்பின் செல்லும், நிலைத்திருக்கும் சீஷர்களில் நீங்களும் இருந்திட வேண்டுமல்லவா?