நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
03.06.2021 | 6. துன்பத்தையல்ல ‘தெய்வ அன்பின் பாதுகாப்பை’ நோக்குவோமாக! |
எஸ்தர் புத்தகத்திலுள்ள மொர்தெகாயுவிற்கு நடந்த சம்பவத்தை சற்று எண்ணிப் பாருங்கள்! அவனுடைய இழிவான சாவிற்குத் தூக்கு மேடையை ஆமான் அன்று இரவு தயார் செய்து கொண்டிருக்கிறான்! மறுபுறத்திலோ, அவனை எவ்விதம் தேசத்தில் கனமடையச் செய்வது என, தேவன் தன் மிகுந்த அன்பில் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்!! மொர்தெகாயோ, எதுவுமே அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை, அந்த ராத்திரியில் அவனை எழுப்பி “தூக்கு மேடையை மாத்திரம்” காண்பித் திருந்தால் அவன் எவ்வளவு கதிகலங்கிப் போயிருப்பான் என்பதை எண்ணிப் பாருங்கள்!
இன்றும் அப்படித்தான், அநேக கிறிஸ்தவர்கள் ‘துன்பங்களை மாத்திரம்’ காண்கிறார்களே அல்லாமல், “தெய்வ அன்பின் பாதுகாப்பையோ” காணத் தவறுகிறார்கள். இவர்களின் கண்கள் “மொர்தெகாயின் நன்மைக்குச் செயல்பட்ட” தெய்வ அன்பைக் கண்டிருந்தால், துன்பமென்னும் மலையை நிமிர்ந்த தோளோடு எதிர்த்து நின்றிருப்பார்களே! அந்த மலை, சமுத்திரத்தின் நடுவில் கவிழ்ந்துவிழும் அற்புத ஜெயத்தையும் கண்டிருப்பார்களே!!