நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
08.05.2025
19. எரிச்சலூட்டும் கணவனை, நான் எதிர்த்துப் பேசியதில்லை!
என் கணவரோ, என்னை விசனப்படுத்தும் கொடுஞ் சொற்களை தாராளமாய் பேசிக் கொண்டே இருப்பார்! அவரது எரிச்சலூட்டும் வன் சொற்களை நான் தொடர்ச்சியாய் சகித்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டேன். ஆகிலும், நெருக்கமான சூழ்நிலையை மாற்றி, என் கணவரோடு கலகலப்பாய் இருப்பதற்கே நான் தொடர்ந்து முயற்சித்தேன். ஒருமுறை, வழக்கமான கோபத்தில், என் இரவு உணவை வெளியே ஜன்னல் வழியாக தூக்கியெறிந்திடுவேன் என கூறியபோது..... “என் அன்பு கணவரே, எனக்கோ ஒரே பசி! அந்த உணவோடு என்னையும் தூக்கி எறிந்துவிட்டால், அந்த உணவை சாப்பிட்டு பசியாறிக் கொள்வேன்” என நான் கூறியதும் அவர் உடனே சிரித்துவிட்டார்! நானும் அவருடன் சத்தமாய் சிரித்து மகிழ்ந்தேன். ‘நான் எவ்வளவுதான் முயற்சித்து அவரை அன்புகூர்ந்தாலும்’ என்னை விசனப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவதை அவரால் நிறுத்திக்கொள்ள முடியவில்லை! இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் தேவன் என்னை அரவணைத்து, அவரது நீண்ட பொறுமையை வழங்கி என்னை ஆதரித்தார். மிக முக்கியமான செயலாய்......
“நான் என் கணவரை எதிர்த்து பேசாதிருப்பதற்கு” போதுமான கிருபையை, தேவன் எனக்குத் தந்து, ஆதரித்தார்! என் கணவருக்கு முன்பாக “என்னை எதிர்த்து பேச வைக்கும் பிசாசின் முயற்சி” அவனையே குழப்பத்தில் ஆழ்த்தியது என்றே நான் உணர்ந்தேன். எல்லாம், தேவன் எனக்கு அளித்த கிருபை ஒன்றே காரணமாகும்!
- (மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)