நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
02.01.2025
01. இம்மைக்குரிய ‘சுக ஜீவியத்தைவிட’ கிருபையே நல்லது!
பவுல் கற்றுக்கொண்ட கிருபையின் ஆச்சரியமே, நமக்கும் வேண்டும்! குறிப்பாக ஊழியத்தில் அவருக்கு ஏற்பட்ட ‘மாம்சத்தில் ஒரு முள்’ தந்த வேதனை, துன்பங்கள் ஆகிய இவைகளுக்காக அல்லது “தன் ஜீவனுக்காக” தேவனைத் தேடி வேண்டிக் கொண்ட பவுலுக்கு..... தேவன் கற்றுக்கொடுத்த பாடம் என்னவெனில்: “பவுலே, உன் எவ்வித துன்ப பலவீனத்திலும், என் கிருபையை அன்றோ நீ தேடியிருக்க வேண்டும்! ஏனென்றால், என் கிருபை உனக்குப் போதும்!” என்றே கற்றுக்கொடுத்தார்! விழிப்படைந்த பவுல் “நிந்தை தரும் நெருக்கங்கள்..... நான் தேவனிடம் ஓடி, கிருபையை நாடச்செய்யும் தருணம் என கண்டேன்! ஆகவே, துன்பங்களை..... சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்!” என ஜெயமாய் கெம்பீரித்தார்!! (2கொரி.12:8,9). “ஜீவனைப் பார்க்கிலும்” (இம்மைக்குரிய சுக துக்கங்களைக் காட்டிலும்) உமது கிருபையே நல்லது! என்ற உண்மையை அனுபவித்தார்!
“இந்த உலகின் ஜீவியத்திற்காக ஓடி, போஜனத்திற்காக உழைத்தவர்கள், கஷ்டங் களுக்காய் பாடுபட்டவர்கள், பலனடையவில்லை! ஆகையால், கிருபையினால் இருதயம் ஸ்திரப்படுவதே நல்லது” என அறிவிக்கும் தேவ வசனத்திற்கு செவி கொடுப்போமாக! (எபி.13:9).
- ரத்னம்