நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.02.2025
06. சத்தியத்திற்கு மாறுபட்ட ஆவிக்குரிய தோற்றம், கவனம்!
ஊழிய வளர்ச்சியில் செல்வதாகக் கூறிக்கொண்டு, தன்னோடு சேர்ந்துள்ள உடன் கிறிஸ்தவர்களைப் புறக்கணிப்பதும், பகைப்பதும், சத்தியத்திற்குப் பெரும் பிழையாகும்! அவர்கள் ஜீவியத்திலும், அவர்கள் ஊழியத்திலும் வளர்ச்சி அடைந்திருக்கலாம்.... ஆனால், தன் உடன் சகோதரனைப் பகைத்து அவனை விட்டு விலகுவது, அபாயகரமானதாகும்! இந்த சகோதரனுடைய மாறுபட்டுப்போன ஆவிக்குரிய தோற்றம், சிநேகத்தை வளர்க்காமல், அதை வெகுவாய் குறைத்தது ஏன்? தன் உடன் கிறிஸ்தவர்களோடு, இன்னும் ஆழமான ஐக்கியம் கொள்ளாமல், இவர்கள் குற்றம் சாட்டுபவர்களின், “புதிய ஆவிக்குரிய வளர்ச்சியை” காய்மாரமாய் புறக்கணித்ததே காரணமாகும்! 1யோவான்3:10-12 வசனங்களில் யோவான் அப்போஸ்தலன் தொடர்ந்து கூறும்போது “இவர்கள் சத்தியத்திற்குரியவர்கள் அல்ல!” என வலியுறுத்தி கூறினார்!
எந்த ஒரு உபதேசமும், பரிசுத்தத்தையும், அன்பையும், அதிக கவர்ச்சியான அழகுள்ளதாயும், பாவத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள மறுப்பதாயும், இருக்க வேண்டும்! அப்போது மாத்திரமே அந்த உபதேசங்கள், கறையேதும் இல்லாத உண்மையானவைகள் என நாம் ஏற்றுக் கொள்ள முடியும்!
ஒரு காலத்தில் தீர்க்கதரிசிகளாய் இருந்தவர்கள், பின் காலத்தில் கள்ளத்தீர்க்கதரிசிகளாய் மாறியது ஏன்? அன்று பரிசுத்தத்தையும், அன்பையும், அழகுறக் காட்டியவர்கள், பாவத்தை சிறிதேனும் சகித்துக்கொள்ளதவர்கள்.... இப்போது தாங்களும் வஞ்சிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சித்து, பிரசங்கிப்பதால் அவர்கள் ‘கள்ளத்தீர்க்கதரிசிகளாய்’ மாறிப்போனார்கள்! (மத்.24 : 24).
சத்தியத்தின்படி வாழாமல் பிரசங்கித்திடும் கள்ளதீர்க்கதரிசிகளுக்கும், அவர்களின் உபதேசங்களுக்கும் விலகி வாழ, கர்த்தர் நம் யாவருக்கும் விழிப்புணர்வு தருவாராக!
- ரத்னம்