நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
பரிசுத்தவான்கள் கூடும் சபைகளில் ஒரு சில கெட்ட மாதிரிகள் அவ்வப்போது தோன்றுவதால், உங்கள் சபையில் அமர்ந்துகொண்டு, அந்த தூய சபையை குறைந்த மதிப்பீடு வைத்து நீங்கள் பார்ப்பது உகந்த செயல் அல்ல! அவ்வித செயலை நீங்கள் செய்தால், வெகுசீக்கிரத்தில் உங்கள் சொந்த சபைகளில் ‘நிறைய கெட்ட மாதிரிகள்’ முளைத்து வருவதைக் காண்பீர்கள்! தேவன் பரிசுத்தப்படுத்தி வரும் ஒரு சபையை ‘அசுத்தம்’ என கூற பயந்திருப்போமாக! உண்மையான ஓர் சபையின் வலிமை, அங்கு முன்னின்று நடத்தும் தலைவர்களைச் சார்ந்ததேயாகும்! அவர்களின் உத்தம முன்மாதிரி மூலமாய், சபையிலுள்ள உண்மையுள்ள விசுவாசிகள் மத்தியில் ஓர் மிகப்பெரிய ஆவிக்குரிய எழுப்புதலை நிச்சயமாய் தேவன் கொண்டு வருவார்! மிக விசாலமான வாசலை முன் வைத்து உலக சமரசத்திற்கும், அதின் மோகத்திற்கும் விட்டுக்கொடுத்து வாழும் ஒரு பெரிய சபைக்கு “தூய்மையான எழுப்புதல்” எக்காலத்தும் வராது! ஆனால் “இந்த உலகத்தில் உள்ள வேறு எதைக்காட்டிலும் தேவனுடைய பிரசன்னமும், அவரது ஆசீர்வாதமுமே மிக மேலானது” என வாஞ்சிக்கும் ‘அந்த சிறிய சபையில்’ தேவன் தன் எழுப்புதலை நிச்சயமாய் கட்டளையிடுவார்! உத்தம ஆவிக்குரிய தலைவர்களை இன்றைய சபைகள் இழந்து நிற்பதே, சபைக்கு ஏற்பட்ட பெரும் துயரம்! இந்த துயரத்தை மாற்றி அமைக்கும் ‘நல்ல மாதிரி கொண்ட’ தலைவர்களை நம் ஸ்தல சபைகளில் தேவன் எழுப்புவாராக!