பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


13.11.2025

46. ‘தாழ்மையுள்ளவர்கள்’ பரிசுத்தாவி வரங்களை செயல்படுத்த வேண்டும்!



 கிறிஸ்துவினுடையவர்கள் ‘பிரபல்யமாகி’ சீரழிந்து போவதை தேவன் விரும்புவதில்லை..... மாறாக, வரங்களின் கிரியைகளை, தாழ்மையுள்ள பரிசுத்தவான்கள் பெற்று, அதை நிறைவேற்றி முடிப்பது அவர்களது பிறப்புரிமையேயாகும்!

 இதை பவுல் குறிப்பிடும்போது தேவன் தன்னுடைய நோக்கத்தை பரிசுத்தாவியின் கிரியைகள் மூலமாய் நிறைவேற்றி முடிப்பதற்கு ‘அற்ப ஜனங்களையே’ தெரிந்து கொள்கிறார் என கொரிந்தியர்களுக்கு கடிந்துரைத்து போதித்தார். பரிசுத்தாவியின் கிரியைகளை ‘தங்களுக்கென வளைத்துக் கொண்டு’ உலக ஆவிக்கு மாற்றத் துடிக்கும் லௌகீக கிறிஸ்தவர்களைக் கண்டித்து “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத்து தர்க்க சாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்க வில்லையா? எப்படி யெனில் ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்” என உரைத்தார் (1கொரி.1:20,27).

 ஆகவே சகோதரர்களே, தேவனுடைய பரிசுத்தாவியும்.... ‘ஆவியின் வரங்களும்’ நம் சபையில், ஆவியில் நிறைந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் விரும்பி நாட வேண்டும் என்பது மாத்திரமல்ல, அது தேவ சமூகத்திலிருந்து புறப்பட்ட ராஜ கட்டளை! என, உறுதியாய் அறிந்துகொள்வோமாக!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!