பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

19.06.2025

25. ‘பரத்தின்மதுரத்தை’ பெற்றவன், பிறருக்கும் கொடுத்திட வாஞ்சிப்பான்!

  ர் பரிசுத்த தேவ மனிதன், மற்ற மக்களையும் பரிசுத்தமுள்ளவர்களாக்குவதற்கு வெகுவாக பிரயாசப்பட்டு பாடுபடுவான். ஒரு பரிசுத்த இருதயம், தான் மாத்திரம் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதையோ அல்லது தான் மாத்திரம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதையோ ஒருக்காலும் விரும்பாது! 

 தேவனுடைய வல்லமையையும், அவருடைய மாட்சி மகத்துவத்தையும், பரிசுத்தத்தின் இனிமையையும் ருசி கண்ட ஒரு மனிதன், எந்த வழிகளில் மற்றவர்களையும் அவற்றை அடையச் செய்யலாம் என்று கடுமையாக முயற்சித்து ஊழியம் செய்வான்! 

 தேனை உண்டு களித்த சிம்சோன், தன் தாய் தந்தையருக்கும் தன்னோடிருந்த மற்றவர்களுக்கும் கொடுத்தான் அல்லவா? பரிசுத்தம் என்ற மதுர தேனைப் பெற்ற மெய் தேவபிள்ளையின் காரியமும் அதுவே தான்! ஒரு பரிசுத்த ஆத்துமா, தான் பெற்ற பரிசுத்தத்தை தனக்குத் தானே சொந்தமான ஏகபோக உடமையாக்கிக்கொள்ள எக்காலத்தும் விரும்பாது! ஒரு சபையின் தலைவன் “பரிசுத்த அக்கினி” நிறைந்தவனாய் இருந்தால், சபை முழுவதும் அந்த பரிசுத்த அக்கினி பற்றியெரியவே வாஞ்சை கொண்டிருப்பான்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!