பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
31.08.2023

12. புறம்பான அழகா? தேவ சாயலா?

திகமான பணம், நேரம் செலவழித்துத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதில் ஆண்களைவிடப் பெண்கள்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது எங்கு பார்த்தாலும் “Beauty Parlors” (அழகு ஒப்பனை நிலையம்) மிகுந்து விட்டன. அது ஒரு பெரிய சேவைத் தொழிலாக  நடைமுறையில் வந்து விட்டது!

தேவனாகிய கர்த்தர் அண்ட சராசரங்களையும் அதில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் ஒரு வார்த்தையில் படைத்தார். ஆனால் மனிதனை மட்டும் ‘சிறப்பான’ தனிப்பட்ட முறையில் சிருஷ்டித்தார். ஆதி.12:26,27-ன்படி தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியும் மனுஷனை உண்டாக்கினார் என்று பார்க்கிறோம். தேவ சாயல் என்பதும் தேவ ரூபம் என்பதும் எத்தனை இயற்கையான பூரண அழகு என்பதை யோசித்துப் பாருங்கள்!

அதற்காக, ஏனோ தானோவென்று உடை உடுத்தி, சுத்தமில்லாத அழுக்காடையோடு காணப்பட வேண்டுமென்பதில்லை! பொது இடங்களில் மற்றவர்கள் முன்பு கண்ணியமாகத் தோற்றமளிக்க வேண்டும். அது, கிறிஸ்தவ பண்பு!

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது முதுமொழி. இருதயம் தேவனுக்கு முன்பாக நேர்மையாக இருக்கும்போது, வெளித்தோற்றத்திலும் தானாகவே மாறுதல் உண்டாகும்.

இயேசு அங்கீகரிக்கும் வகையில் அவரை முன் மாதிரியாக வைத்து வாழ்வதே, அவரது சாயலை உள்ளும் புறம்பும் தரித்துக் கொள்வதற்கு அடையாளம்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!