பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

30.04.2026                                                      18வது வாரம்

சபை பாடல்களில் ‘ராகத்தைவிட’ அபிஷேகமே தங்கியிருக்க வேண்டும்!

வேல்ஸ் நாட்டின் மாபெரும் உயிர்மீட்சிக்கு காரணமாயிருந்த இவான் ராபர்ட்ஸ் அவர்களின் ஊழியத்தில், 16வயது நிரம்பிய ஓர் தாழ்மையான சகோதரி இருந்தாள். அந்த சகோதரியின் பெயர்கூட அனேகருக்குத் தெரியாது. அந்த சகோதரி, இவான் ராபர்ட்ஸ் நடத்தும் கூட்டங்களில் பாட்டு பாடுவது வழக்கம். சுவிசேஷ பாடல்களை மிகுந்த தாழ்மையோடும் தியானத்தோடும் பாடுவாள்! இந்த சகோதரியின் பாடலில், அவளது ராகத்தைக் குறித்து இன்றுவரை யாரும் குறிப்பிடவில்லை. ஆனால், அவள் பாடுவது பரிசுத்த ஆவியானவரே பாடுவது போலவும், அந்தப் பாடலின் மூலம் தேவனுடைய நாமம் அதிகமாய் மகிமைப்படுவதையும் கண்ணாரக் கண்டார்கள்! இவான் ராபர்ட்ஸ் பிரசங்கிப்பதற்கு எழுந்து வந்து சில வேத வாக்கியங்களையும், சில புத்திமதிகளையும் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போதே, ஜனங்கள் மிகுந்த கண்ணீரோடு தேவனிடத்தில் மனந்திரும்புவார்கள். ஏனெனில், அந்த சகோதரியின் பாடல், ஆவியின் வல்லமையோடு வெளிப்பட்டு ஜனங்களின் இருதயத்தை ஏற்கனவே உடைத்திருந்தது! இவான் ராபர்ட்ஸ் பிரசங்கித்தவுடன் கிட்டத்தட்ட திரள் கூட்டம் அனைவரும் தங்களை கிறிஸ்துவுக்கு கண்ணீரோடு ஒப்புக்கொடுப்பார்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!