நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

25.06.2026 26வது வாரம்
‘இருள் நீங்கி’ ஒளி பிரகாசிக்கும், நமது அனுதின ஈஸ்டர் பண்டிகை!

உத்தமமான ஆவிக்குரிய ஜீவியத்திற்கு..... இராக்காலம் வந்தபிறகுதான், அதிகாலை விடிவெள்ளி பிரகாசம் உண்டு என்பதை அனேகர் மறந்து போய்விட்டார்கள்! அதுபோலவே, உயிர்த்தெழுதலின் ‘இயேசுவின் ஜீவன்’ நமக்கு தோன்றுவதற்கு முன்பாக ‘சுயத்தின் ஆளுகைக்கு’ மரணம் சம்பவிக்க வேண்டும்! என்பதையும் உணர்ந்திட மறந்து விட்டார்கள்!
தேவனுக்குப் பிரியமான சீஷனாய் வாழ்ந்து அவர் நாமத்தை பிரஸ்தாபப்படுத்த விரும்பும் எந்த கிறிஸ்தவனும், ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானம் செய்ய வேண்டும்..... அதையும் மனப்பூர்வமாய் செய்ய வேண்டும்!.... “என் ஆண்டவரே, என்ன கிரயமானாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்! எந்த ரூபத்தில் சிலுவை என்னை அண்டிவந்தாலும், அதை நான் ஏற்று உம்மைப் பின்தொடர்வேன்!” ஆமென். ஆ, இதுவன்றோ இருண்டு போன நம் ஜீவியத்திற்கும், நம் சபைகளுக்கும் ஒளியேற்றும் ஒரே வழி! இது ஒருநாள் ஈஸ்டர் பண்டிகையல்ல! மெய்யாகவே நம் சரீரத்தில் விளங்கிடும் ‘இயேசுவின் ஜீவன்!’ வருடம் முழுவதும், நாள்தோறும் பிரகாசித்திடும் “ஈஸ்டர் பண்டிகையின்” குதூகலம்!
- ரத்னம்
