பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


16.10.2025

42. நம் சமாதானத்திற்கு ஆதாரம், கிறிஸ்துவே!


 நம்முடைய ஆத்துமா சங்கீதக்காரனோடு சேர்ந்து மகிழ்ந்து: “எனக்கு விரோதமாய் ஒரு பாளையமிறங்கினாலும், அது என்னை அணுகாது! என்மீது ஒரு யுத்தம் எழும்பினாலும், அவரில் நான் நம்பிக்கையாயிருப்பேன்” எனக் கூறும் உன்னத அறிக்கையேயாகும்! (சங்.27:3).

 இவ்வித அனுபவத்தைப் பெற்ற ஒருவனுடைய ஆத்துமா ‘எப்பக்கத்திலிருந்து தாக்கப்பட்டாலும்’ தொடர்ந்து ஒரு கற்பாறையில் நிலைநிற்பது போலவே இருக்கும்! சுய சித்தம் அல்லது சொந்த விருப்பத்திற்கு இடம் இல்லை என்ற நிலைக்கு வந்தவன், தேவன் கட்டளையிடுகின்ற யாதொன்றிற்கும் கீழ்ப்படிவான்! அது, உயர்வோ அல்லது தாழ்வோ, பெரிதோ அல்லது சிறிதோ, சுவையானதோ அல்லது கசப்பானதோ, கனத்திற்குரியதோ அல்லது கனவீனத்திற்குரியதோ, ஜீவனாகிலும் அல்லது யாதொரு கேடான அசம்பாவிதமானாலும், அவனுடைய ஆத்துமாவில் தங்கியிருக்கும் சமாதானத்தை அசைத்து விட முடியாது!  ஜீவகாலமெல்லாம் நம்மோடு உறவாடி வந்த ‘நம் சொந்த ஆத்துமா’ எளிதில் வஞ்சனைக்கு உட்பட்டுவிட முடியும். நாம் பெற்ற சமாதானத்திற்குள் ‘நம் சுய நல விருப்பம்’ ஒரு கிருமியைப் போல் ஊடுருவிச் சென்றிட முடியும் என்பதை உணர்ந்து, நம் ஆத்துமாவின் சமாதானத்தை, பரிசுத்த ஆவியின் பெலத்தைக் கொண்டு விழிப்புடன் காத்துக்கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பாகவே இருக்கிறது! அது ‘ஓ வென்று பாய்ந்திடும்’ நீர் வீழ்ச்சியின் அருகில் ‘தன் குஞ்சுகளோடு’ மகிழ்வுடன் வாழும் பறவை கூட்டைப்போலாகும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!