பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
10.12.2020

11. ‘விசுவாசத்திற்கு’ கீழ்ப்படிவதே கிறிஸ்தவ புனிதம்!

image

புதிய ஏற்பாடு போதகத்தின் விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் எந்த முரண்பாடும் இல்லை. எந்த விசுவாசமும் கீழ்ப்படிதலுக்குள் நடத்தாமல் இருப்பதில்லை! அதேபோல் எந்த கீழ்ப்படிதலும், விசுவாசத்திலிருந்து தோன்றாமல் இருந்ததில்லை! ஆகவே விசுவாசத்தின் புனிதத்திலிருந்து விளைவதுதான் தேவ பக்தியான கீழ்ப்படிதல்!

ரோம கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிருபம் எழுதியபோது “உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்தை மனப்பூர்வமாய் நீங்கள் விசுவாசித்ததாலேயே உங்கள் முழு இருதயமாய் கீழ்படிந்தீர்கள்!”. அதனிமித்தமே நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையானீர்கள் என்றும் எழுதினார்.

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. நாணயத்தின் ஒரு பக்கத்தை நீங்கள் பிளந்து எடுத்தால், முழு நாணயத்தின் மதிப்பும் போய்விடும். அதுபோலவே விசுவாசமும், கீழ்ப்படிதலும் ஒருங்கிணைந்ததாகும். ஆனால் அதைப் பிரிக்க நினைத்தால், அந்த இரண்டிற்குமுரிய தனித்தனி மதிப்பை இழந்துவிடும்! வேதத்தை ஆதாரமாகக் கொண்ட விசுவாசத்தில் கீழ்ப்படிதல் மனப்பூர்வமாயும், மகிழ்வுடனும் சம்பவிக்கும்! ஆம், தெய்வ விசுவாசத்தில் எவ்வித கட்டாயமும் இருப்பதில்லை.... அது, தானாக இறைவனின் புகழுக்காக ‘கீழ்ப்படிந்து’ மலர்ந்து விடும்! உத்தமமான “விசுவாசத்திற்கு கீழ்ப்படிதல்” சபைகளில் ஓங்கிப் பெருகுவதாக! ஆமென்

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!