பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

30.01.2025

05. சோம்பலற்ற கிறிஸ்தவனே, உன்னத ஆசீர்வாதங்கள் பெறுவான்!

  லக நன்மைகளை அவபக்தர்கள் தாராளமாய் அனுபவித்தாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் தேடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்! தேவ கிருபையின் பிரசன்னம் உலகத்தில் அல்ல, நமது உள்ளத்தில் வெளிப்பட இடங்கொடுக்க வேண்டும்! 

  மதிகெட்ட ஐசுவரியவானுடைய நிலம் நன்றாய் விளைந்து செழித்ததுபோல, மதிகெட்ட சோம்பேறியின் ஆத்துமா செழிக்கும் என்று ஒருக்காலும் சொல்ல முடியாது.

ஆண்டவரைத் தேடினாலும் தேடாவிட்டாலும் தேவ கிருபை நம்மை இரட்சிக்கும் என்று நினைப்பது வஞ்சகமும் துணிகரமுமாகும். 

 “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே” என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதினதுபோல.... கிறிஸ்து இன்னார் என்பதையும், நமக்காக அவருக்குள் அடங்கியிருக்கும் ஆசீர்வாதங்கள் எவை என்பதையும் நாம் அறிந்து உணரும்போதுதான், கிருபையின் ஐசுவரியப்பெருக்கத்தை அறிந்து அவரைப் போற்றுவோம். நிர்விசாரியான சோம்பேறியை கிருபை இரட்சிக்கும் என்று ஆண்டவர் ஒருபோதும் சொன்னதில்லை! விழித்துக் கொள்ளுங்கள், இனியாவது கிருபையின் ஐசுவரியத்தை நோக்கி உங்கள் நடையைத் திருப்புங்கள்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!