நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
27.03.2025
13. இரு திறத்தாரை ஐக்கியப்படுத்தும் கிறிஸ்துவின் பண்பு!
திடீரென்று சில சமயங்களில், என் கணவரும் அவரது தாயார் அல்லது எனது மாமியாரும் மிக மோசமாய் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொள்வார்கள். நான் தனியே இருக்கும்போது என் மாமியார், என்னுடைய கணவர் எவ்வளவு மோசமாய் நடந்து கொண்டார் என குறை கூறினார்கள். மற்றொரு தனிமையான நேரத்தில் என் கணவர் என்னிடம் வந்து அவருடைய தாயார் அல்லது எனது மாமியாரை பற்றி கோபமான புகார்களை கூறினார்கள். இவ்வாறு ஒருவருக்கொருவர் புகார் கூறிய நேரத்தில், ஒருவரைக் குறித்து மற்றொருவர் சொன்ன புகார்களை நான் ஒருபோதும் தெரிவித்தது இல்லை! மனுஷீகமாய் கூற வேண்டுமென்றால் இதுபோன்ற சம்பவங்களை ‘எனக்கு ஆதாயமாய்’ நான் மாற்றியிருக்க முடியும். அதன் மூலம் தேவன் நியமனம் செய்த இடுக்கமான வழியிலிருந்து என்னை நானே தப்புவித்திருக்க முடியும். இதற்கு மாறாக, கிறிஸ்துவின் அன்பில் அவர்களை ஒருவருக்கொருவர் ஒப்புரவாக்கிட என்னால் இயன்ற அனைத்தையும் செய்தேன்! ஒருவருக்கொருவரிடம் இருந்த நன்மையானவைகளை மாத்திரம் நான் எடுத்துக்காட்டி, அவர்கள் இருவரும் மகிழ்வுடன் மீண்டும் சினேகிதர்களாய் மாறினார்கள்! அவ்வப்போது, சம்பவித்த இந்த அனுபவங்கள் மூலமாய், இருதிறத்தாரை ஐக்கியப்படுத்துவதே கிறிஸ்துவின் பண்பு என்பதை விளங்கிக் கொண்டேன்.
-(மேடம் குயான் வாழ்க்கை தீபங்கள்)