பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

17.04.2025

16. சிருஷ்டிப்பு மலர்களும் குருவிகளும் என் சிருஷ்டிகரை தழுவச்செய்தது!

 தேவனே தனது சிருஷ்டிப்பின் அழகின் மூலமாய், என் சிருஷ்டிகரை சந்திக்க ஏற்படுத்தி வைத்த ஏற்பாடு.... “காட்டு புஷ்பங்களை கவனித்துப் பாருங்கள்” என ஆண்டவர் எனது மகிழ்ச்சிக்காகவே கொடுத்த கட்டளை! என்பதை, ஆழமாய் உணர்ந்தபடியால், அப்படியொரு மகிழ்ச்சி எனக்குள் வந்தது. இப்போது எனது அழகிய தோட்டத்தில், வண்ண வண்ண பூக்களின் மூலமாகவும், சிட்டுச் சிட்டு கலரான பறவைகளின் மூலமாகவும் என் விசுவாசம் ஓங்கி வளர்ந்து, மகிழ்ச்சியினால் என் உள்ளம் நிறைந்தது. இப்போது என் கணவர் சொல்லி அல்ல, நானே அடிக்கடி தோட்டத்திற்குச் சென்று, அங்கு அமர்ந்து, வண்ண பூக்களையும் ஆடிப்பாடும் குருவிகளையும் அழகிய புற்களையும் கண்டு மகிழ்ந்து, என் நேசரோடு உறவாடி ஆனந்தமடைந்தேன்!

 என் தோட்டத்து அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் என் ஜீவியத்திற்கு மிக அருமையானதாய் மாறியது. நான் இவ்வாறு தனிமையில் என் தேவனைத்தேடி அமைதியான நிலையில் அவரோடு அமர்ந்து உறவாடி வாழ்ந்திருக்கும் இன்றைய நிலையை, நான் முன்பே கண்டிருந்தால் “என்னுடைய அனைத்து சிலுவைகளும் மிகச் சிறியதும் எளியதுமாய் மாறியிருக்கும்” என்பதை உணர்ந்தேன்.

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!