பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
09.06.2022

06. இக்கட்டில், தம்முடையவர்களைப் பாதுகாக்கும் கர்த்தர்! 


ல்லூறு அல்லது பருந்துகளின் வருகையை காகங்கள், மைனாக்கள் போன்ற பறவைகள் குரல் எழுப்பி.... பெலவீனமான சிறிய பறவைகள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வசதியாக ‘அவைகளை’ முன்கூட்டியே எச்சரித்து விடுகின்றன! இப்படி எல்லாம் தனது அற்பமான ஜீவராசிகளுக்கு பாதுகாப்பை ஞானமாக வழங்கும் தேவன், சாவாமையுள்ள தமது சாயலாக மாறும்படி அழைக்கப்பட்ட அவரது பிள்ளைகளுக்கும், சாத்தானுக்குமுள்ள வாழ்வின் கடும் போராட்டத்தில்  ஒத்தாசையாக எழுந்து வந்து, யுத்தம் செய்யும் கர்த்தராக இருப்பார் என்பது அதிக நிச்சயமல்லவா? தமது தாசனாகிய தாவீதை, அவனது பிராண பகைஞனாகிய சவுலுக்கு தேவன் ஒருபோதும் ஒப்புக்கொடுக்கவே இல்லை. நேருக்கு நேர் இருவரும் ஒன்றாக அரண்மனையில் இருந்தபோது, தனது கூர்மையான ஈட்டியை சவுல் அரசன் தாவீதின் மார்புக்கு நேராக எறிகின்றான். ஆனால், அந்த ஈட்டி தாவீதின் நெஞ்சை ஊடுறுவிச் செல்லாதவாறு ‘தேவகரம் மாத்திரமே’ அந்த இடத்தில் அவனைப் பாதுகாத்தது.  “சவுலின் பட்டயம் வெறுமையாய் திரும்பினதில்லை” என்று தாவீதே கூறியுள்ளார் (2சாமு 1:22).  ஆயினும், அந்த குறிப்பிட்ட நாளில் தேவன் அந்த பட்டயத்தை தமது தாசன் நிமித்தமாக வெறுமையாக திருப்பி அனுப்பி விட்டார்! அந்த நல்ல கர்த்தர் இன்றும் மாறாதவராய் தம்முடையவர்களைப் பாதுக்காப்பது அதிக நிச்சயமல்லவா?

                                                                                                                                                                 - ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!