பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


23.05.2024

21. ‘ஞாயிறு’ கர்த்தருடைய நாளை கனம் செய்யுங்கள்!


 பாரிஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில், ஸ்காட்லாந்து தேசத்திற்கு முதன் முதலாய் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த ஓட்டப்பந்தய வீரன், எரிக் லிடல்! ஸ்காட்லாந்து மக்கள் இவரை ‘பறக்கும் ஸ்காட்மேன்’ என அழைத்து மகிழ்ந்தார்கள். எரிக் லிடல் தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்து வாழ்ந்த கிறிஸ்தவன்! இந்த எரிக் லிடல் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொள்ள மறுத்ததால், அடுத்து நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் அவரது திறமைக்கு ஏதுவான 100 மீட்டர் பந்தய ஓட்டத்திலிருந்து கட்டாயமாய் வெளியேற்றப்பட்டார்! ஆனால், எரிக் லிடலை விரும்பும் மக்களை சமாதானப்படுத்த, 400மீட்டர் ஓட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். எரிக் லிடல் சகோதரனுக்கோ, அந்த 400 மீட்டர் ஓட்டப்பயிற்சியில் பழக்க மற்றவராயிருந்தார். பயிற்சி இல்லாத எரிக் லிடல் தோற்றுவிடுவார் என்பது உறுதியாகி விட்டது! .....பந்தய நேரம் வந்தது! ஓட்டப்பந்தய எல்லைக் கோட்டிற்கு லிடல் வந்தார். அந்த நேரத்தில், ஒரு அமெரிக்க இளைஞன் ஓடி வந்து, எரிக் லிடல் கையில் ஒரு சிறிய காகித துண்டை கொடுத்து விட்டு ஓடிவிட்டான்! அந்த காகிதத் துண்டில் “என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்” என்ற 1சாமுவேல்.2:30-ம் வசனம் எழுதப்பட்டிருந்தது. அதை எரிக் லிடல் கையில் வைத்து வாசித்த அடுத்த கணமே பந்தயம் துவங்கிவிட்டது. அந்த வசன காகித துண்டை கையில் இறுகப் பிடித்து கொண்டே எரிக் லிடல் ஓடினார்! அந்த பந்தயத்தை எரிக் லிடல் ஜெயித்தது மாத்திரம் அல்லாமல், ஏற்கனவே இருந்த ஓட்ட நேரத்தை முறியடித்து 47.6 வினாடிகளில் ஓடி அபார வெற்றி அடைந்தார்!!


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!