பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
08.10.2020

9. தேவனால் ஆட்கொள்ளப்படுவதே ‘ஆராதனை’

image

தேவனை ஆராதிக்க உந்தும் ஒருவனுடைய ஆவியில், முதலாவது நிலை கொண்டிருக்க வேண்டியது “அளவில்லாமல் தேவன்மீது கொண்ட நம்பிக்கையே யாகும்!” இப்படி ஒரு விசால நம்பிக்கையை தேவன் மீது வைத்திராதவன், அவரை ஆராதித்திட முடியாது.

ஆகவே தேவனை முழு நம்பிக்கையுடன் தன் ஆவியில் நெருங்கினவன், அவருடைய மகத்துவ மேன்மையை புகழாமல் இருந்திட முடியாது! அவரது ஆவியை நெருங்கிவிட்ட அவன், தேவனால் முற்றிலும் சிறைப்பட்டு போவான்!

சர்வ வல்ல தேவனுடைய அன்பினால் கவரப்பட்டு, தேவனோடு ஒன்றர கலந்து, அவருக்கு முன் “அதமானேன்!” என முகம்குப்புற பணிந்து கிடப்பான்!!

இந்த அற்புத சமயத்தில்தான், தன் முழுப் பெலத்தையும் கொண்டு “தேவனே நான் உம்மை நேசிக்கிறேன்!” என பரவசமாய் அவரை அன்புகூருவான். அந்த முழுமையான நேசத்தில் தெய்வ பயமும், அதிசயமும், ஏக்கமும், ஆச்சரியமும் கலந்திருக்கும்! சில சமயங்களில், தன் ஆராதனையின் இறுதியில் ‘மூச்சடைத்து மௌனமாகி’ விடுவான்! ஏனெனில், தேவனுடைய ஆவியில் அவனது ஆவி ஒன்றர கலப்பதே அந்த இரகசியம்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!