பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


26.09.2024

39.  பிரசங்கித்தவர்கள் ‘வாழத்தவறி’ கள்ளத்தீர்க்கதரிசிகளானார்கள்!


         

 ன் உடன் கிறிஸ்தவ விசுவாசிகளோடும், உடன் ஊழியர்களோடும் இன்னும் ஆழமான ஐக்கியம் கொள்ளாமல்,  அவர்களை குற்றம் சாட்டுகிறவர்களை ‘ஆவிக்குரிய வளர்ச்சி பெற்றவர்களாய்’ போற்றப்படுவதை புறக்கணிப்பதே வேதத்தின்படி பாதுகாப்பானதாகும். ஏனெனில் 1யோவான் 3:18,19 கூறுகிறப்படி “இவர்கள் சத்தியத்திற்குரியவர்கள் அல்ல!” என அறிந்திடக்கடவோம்.

  எந்த ஒரு உபதேசமும், பரிசுத்தத்தை அதிக கவர்ச்சியான அழகுள்ளதாயும், பாவத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள மறுப்பதாயும் இருக்க வேண்டும்! அப்போது மாத்திரமே, அந்த உபதேசங்கள், கறையேதும் இல்லாத உண்மையானவைகள் என நாம் ஏற்றுக் கொள்ள முடியும். 

  ஒரு காலத்தில் தீர்க்கதரிசிகளாய் இருந்தவர்கள் பின் காலத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகளாய் மாறியது ஏன்? அன்று பரிசுத்தத்தை அழகுறக் காட்டியவர்கள், பாவத்தை சிறிதேனும் சகித்துக்  கொள்ளாதவர்கள்.... இப்போது தாங்களும் வஞ்சிக்கப்பட்டு, தெரிந்துக் கொண்டவர்களையும் வஞ்சித்து பிரசங்கிப்பதால் அவர்கள் ‘கள்ளத்தீர்க்கதரிசிகளாய்’ மாறிப் போனார்கள்! (மத்தேயு.24 : 24).

  சத்தியத்திற்கு விரோதமான, பிழையான உபதேசங்களுக்கு விலகி வாழ, நம் ஆத்தும வளர்ச்சிக்குரிய விசுவாசத்தோடு சேர்த்து நம்மை சொஸ்தப்படுத்தும் ‘ஆரோக்கியமான’  நடைமுறையில் வாழும் ஜீவியமும் வேண்டும் என்பதை நாம் எக்காலத்தும் மறவாதிருப்போமாக! அதுவே, நம் ‘மெய்யான ஒளியின்’ ஜீவியமும் ஊழியமுமாய் இருக்கிறது!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!