பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

14.11.2024

46.  ‘ஈட்டி முனையிலும்’ தம்முடையவர்களை காக்கும் கர்த்தர்!

 மது தாசனாகிய தாவீதை, அவனது பிராண பகைஞனாகிய சவுலுக்கு, தேவன் ஒருபோதும் ஒப்புக்கொடுக்கவே இல்லை. நேருக்கு நேர் இருவரும் ஒன்றாக அரண்மனையில் இருந்தபோது, தனது கூர்மையான ஈட்டியை சவுல் அரசன் தாவீதின் மார்புக்கு நேராக எறிகின்றான். ஆனால், அந்த ஈட்டி தாவீதின் நெஞ்சை ஊடுறுவிச் செல்லாதவாறு “தேவகரம்” அந்த இடத்தில் அவனைப் பாதுகாத்தது!

“சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை” என்று தாவீதே கூறியுள்ளார் (2சாமு.1:22).  ஆயினும் அந்த குறிப்பிட்ட நாளில் தேவன் அந்த பட்டயத்தை தமது தாசன் நிமித்தமாக வெறுமையாக திருப்பி அனுப்பி விட்டார். 

 சவுல் அரசனும், அவனது ராணுவமும் ஒன்று சேர்ந்து, தாவீதை காட்டிலுள்ள ஒரு கௌதாரி பறவையை வேட்டையாடுவதுபோல நீண்ட நாட்களாக தேடி அலைந்து வேட்டையாட நினைத்தும், அந்த எண்ணத்தை கர்த்தர் நிர்மூலமாக்கினார். தமது அபிஷேகிக்கப்பட்ட பிள்ளையான தாவீதை அவர் கண்மணிபோல பாதுகாத்து முடிவிலே தமது நித்திய மகிமையிலே பூரண ஆயுசு காலத்திற்குப் பின்னர் தன்னோடு சேர்த்துக் கொண்டார்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!