பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
10.01.2019

2. தேவனை கண்டடையும் ‘மெய் ஆராதனை!’

image

இன்றுள்ள “ஆராதனை.... ஆராதனை” எனக்கூறும் குழுக்களை கவனித்துப் பார்த்தால், அன்றைய அத்தேனே பட்டணத்தார் போலவே “அங்கு தேவன் அறியப்படவில்லை!” என்பதை நாம் பார்க்க முடிகின்றது! (அப்.17:23).

வாழ்வின் துயரத்தில், பக்தியுள்ளவனின் தேவை ‘வெளிப்புறமான’ அந்த ஆழமில்லாத ஆறுதல் அல்ல! அந்த தியங்கிடும் வேளையில், அவனது ‘ஆழமாகிய ஆத்துமா’ தன் ‘தேவனாகிய ஆழத்தையே’ தேடி கூப்பிடும்! ஏனோ, தானோவென்று அல்ல.... பாலை வனத்தில் தண்ணீர் இல்லையென்றால், தாகத்தால் செத்துவிடும் நிலைகொண்ட மானைப் போலவே, “என் தேவன் எங்கே?” என வாஞ்சித்து கதறி கூப்பிடும்! (சங்.42:1,3,7). தன் தேவனை இப்படி கூப்பிட்டு தேடியவனுக்கு, அவர் வருவார்! மதகுகள் திறந்து விடும் “நீர் வீழ்ச்சியாய்” அலைபுரண்டு வருவதுபோல் அவனிடம் வருவார், தாகம் தீர்ப்பார்!! (வச.7). அவரது சமூகத்தில் தாகம் தீர்ந்த அவனுக்கு, அவரே இரட்சிப்பும் கீதமுமாய் மாறுவார் (வச.5,11). இவ்வாறு தேவனை அறிந்து, ஆழத்தோடு ஆழம் சந்திக்கும் இங்குதான், ஒருவன் தன் நேசரோடு இனிய ஆராதனையை பெறுகிறான்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!