பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

12.02.2026

முன்பைவிட ‘இப்போதே’ சபை அதிக விழிப்பாயிருந்தல் வேண்டும்!

  சபைகள் யாதொரு குழப்பமின்றி, வேதத்திலும் கிறிஸ்துவிலும் பூரண நம்பிக்கை வைத்திருந்த காலத்தில், கிறிஸ்துவின் ஜீவியத்தை மென்மேலும் எழுதுவதே போதுமானதா யிருந்தது! ஆனால், தற்காலமோ அப்படிப்பட்டதன்று! வேத விரோதிகள் புறம்பேயிருந்து எதிர்த்த காலம்போக, சபைக்குள்ளிருக்கும் வேதபண்டிதர்களே (Bible Teachers) வேதத்தையும் கிறிஸ்துவையும் புரட்டத் துணிந்துள்ளார்கள். இவர்களின் தாறுமாறு கொள்கைகள், தேசமெங்கும் பரவியிருக்கின்றன! வேதசாஸ்திர கல்லூரிகளிலும் நுழைந்துள்ளன. போதகர்களும், வேதசாஸ்திர மாணாக்கரும் இதற்கு துணைபோகின்றனர்! 

 வேத சாஸ்திரிகள் தடம் புரண்டு செல்வதை எதிர்நிற்கக்கூடாமல், சாதாரண கிறிஸ்தவர்கள் தத்தளிக்கின்றனர். ஆதிப்பிதாக்களின் விசுவாசம், இன்றைய வேதபண்டிதமார்களுக்கு அறிவீனமாகத் தோன்றுகிறது. சகலமும் வேத அறிவின் ஆராய்ச்சியாயிருக்கிறதேயன்றி, விசுவாசத்துக்கு இடமில்லை! 

 தேவ வசனத்துக்கு ஒரு காலத்திலிருந்த மதிப்பும் பக்தியும் குறைந்துள்ளது. காரியங்கள் இவ்வாறிருக்க, சபைகளில் ‘கிறிஸ்துவின் ஜீவனில்லாத’ நிலைமையைக் குறித்து நாம் ஆச்சரியப்படுவானேன்? ஆகவே, இக்காலத்தின் நிலைமை அறிந்து கிறிஸ்தவனும், கிறிஸ்தவ சபையும் மிகுந்த விழிப்புடன் இருந்திட வேண்டியது அவசியமாயிருக்கிறது!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!