பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
07.09.2023  

13. பரிசுத்தாவியின் ‘ஒளி நிறைந்த’ வாழ்க்கை!



ரிசுத்தாவியினால் நிறைந்து வாழ்பவன், ஒருவேளை “தகிக்கும் கொள்ளிக் கட்டையைக் கூட” விழுங்குவானேயல்லாமல்...... ஒருக்காலும் பணம் சம்பாதிப்பதை தன் குறிக்கோளாய் கொண்டு மாய்ந்து போக மாட்டான்! மேலும், தேவனை மகிமைப்படுத்தாமல் இவ்வுலக வாழ்வின் பெருமைகளுக்கு கைகொடுக்கும் “ஆடம்பர உடைகள்... நகைகள் போன்றவைகளுக்கு” தன் பணத்தை செலவழித்து வீணாக்கமாட்டான்!

மேலும், அந்த ஆவிக்குரிய கிறிஸ்தவனைச் சுட்டிக்காட்டும் மற்றொரு முத்திரை யாதெனில், பிறருக்குத் தீமையை உண்டாக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலேயும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டான். “தேவ அன்பு” அவனுடைய உதடுகளைக் காத்து இருக்கிறபடியால், அவனால் யாரைக்குறித்தும் தீமையாய் பேசவே முடியாது. இவன், தேவன் தனக்குத் தந்தருளிய விலையேறப் பெற்ற “பேசும் வரத்தை” ஜனங்களுக்குப் பக்தி விருத்தி உண்டாக்காத, உபயோகமற்ற, தரம் குறைந்த வார்த்தைகளையும் “ஜோக்குகளையும்” பேசி வீணடிக்க மாட்டான். 

மேலும் அந்த கிறிஸ்தவன், பரிசுத்தமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தி கொண்டவைகளெ வைகளோ அவைகள் மீதே தன் முழு கவனத்தையும் வைத்திருப்பான். ஆகவே, அவன் எதைச் செய்தாலும் அல்லது பேசினாலும் அவையாவும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ பிரபல்யத்துக்கென்றே செய்வான்!

தேவ வல்லமையால் நிறைந்த அந்த கிறிஸ்தவன், தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அயலகத்தாருக்கும், அந்நியருக்கும், நண்பர்களுக்கும், சத்துருக்களுக்கும்..... ஆக, “எல்லோருக்கும்” நன்மை செய்வான்! இந்த நன்மைகள் பசியுள்ளோர்க்கு உணவு தருவரும், உடையில்லாதவர்க்கு உடை தருவதும், வியாதியிலிருப்பவர்களையும் சிறையிலிருப்ப வர்களையும் போய் விசாரிப்பதும் அடங்கும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!