நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

23.10.2025
43. சுற்றி சம்பவிக்கும் சூழ்நிலையில், இருதய சஞ்சலம் கூடாது!

சோதனைகள் யாவும் நம் இலக்கை அடைய தடை செய்யும், சோதனைகளாகவே இருக்கின்றன. மற்றவர்களிடமிருந்து உங்களை அணுகும் சோதனைகளைவிட, உங்களுக்குள் இருந்து ஏற்படும் சோதனையே கொடிதாய் இருக்கிறது: ஓர் கிறிஸ்தவனாய் வாழ்வது எளிதல்ல....என்னுடைய பணிதளத்தில் அவமானப்படுத்தப்படுகிறேன்! என் அலுவலகத்தில் எனக்கு வர வேண்டிய உயர்வு கிடைக்கவில்லை! என் தத்துவ ஆசிரியர் பாடம் எடுக்கையில், என் விசுவாசத்தை தாக்குகிறார்! என் வாழ்க்கை துணையாய் இருப்பவர், குடும்பத்தில் பல சிக்கல்கள் ஏற்படுத்துகிறார்! இக்கால சமுதாயத்தில் ஒரு கிறிஸ்தவனாய் வாழ்வது மிக மிக கடினம்! என்ன செய்வது, காலம் கடைசியாகி விட்டது!” என்றெல்லாம் புலம்புவதே, நாம் ஜெயம் பெற தடைசெய்யும் சோதனை அம்புகள்!
நாம் ஓடும் ஜீவிய பாதையில் இருக்கும் அநேக விசுவாசிகள் “இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நம் தேசத்தில் விரைந்து காரியம் சரிப்படவில்லையென்றால், நாம் தொலைந்தோம்” என்றெல்லாம் கூறுகிறார்கள். இதுபோன்ற அவிசுவாச புலம்பலின் மத்தியில், ஓர் உத்தம கிறிஸ்தவன் தோல்வி அடைந்திடக்கூடாது! மனதை இளக்கரிக்கப் பண்ணும் செய்தியை கேட்டு நாம் வாழாமல், தேவன் மீது வைத்திருக்கும் விசுவாசத்தில் பிழைத்து வாழக்கடவோம்! அதுவே, கிறிஸ்துவுக்குள் நமது ஜெயம்!
- ரத்னம்
