நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
உங்கள் வீடோ அல்லது கானாவூர் பொதுஇட கூடுகையோ “கொஞ்சம் கோபப்படாமல் இருக்ககூடாதா? ஏன் இந்த முறுமுறுப்பு? சாந்தம் இல்லையே!” என்றெல்லாம் அவலக்குரல் தொனிக்கிறதே? நீங்கள் முறையிட்ட நபரிடமிருந்து ஓர் குரல் தொனிப்பதை ‘இன்றாவது’ உற்று கேளுங்கள்: “கொஞ்சம் என்னிடம் பொறுமையாய் இருங்கள்! என் வேளை இன்னமும் வரவில்லை! உங்களுக்கு ருசியில்லாத என் கோபத்தை, முறுமுறுப்பை இயேசுவுக்கு முன்பாக ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்..... ஆ, இப்போது பார்த்தீர்களா? சாந்தமும், அன்பும் பரத்திலிருந்து வந்து எனது ருசியில்லா தண்ணீரை, மிகுந்த ருசியான திராட்ச ரசமாய் மாற்றிவிட்டதே! (ரோமர் 5:5). இந்த வேளை வருவதற்கு, நீங்கள் பொறுமையாய் காத்திருந்ததற்கு நன்றி!” என்ற குரல் உங்கள் வீட்டிலும், கூடிவந்த நண்பர்கள், உறவினர்கள் மத்தியிலும் எதிரொலிப்பதை காண்பீர்கள்! இவ்வாறாக “இயேசுவின் மகிமை வெளிப்படும்” அன்பின் ஆரவார மகிழ்ச்சி உங்கள் வீட்டிலும், நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் மாத்திரமல்ல, உங்கள் சபையிலும் தொனிப்பது சாத்தியமே என மனதார விசுவாசித்து வாழுங்கள்! (யோவான் 2:11) அல்லேலூயா.