நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
06.04.2023 | 05. ‘இயேசுவின் பிரசன்னமே’ உத்தம சபையின் அடையாளம்! |
ஓர் பிரபல்யமான சபை போதகரிடம், ஓர் இளம் போதகர் தன்னை அறிமுகப்படுத்தி “போதகர் அவர்களே, என்னை நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனெனில், நான் ஒரு சிறிய சபைக்கே போதகனாயிருக்கிறேன்” எனக் கூறினார். அதற்கு பதில் உரைத்த பெரிய சபையின் வயோதிப ஊழியர் “இளம் போதகரே, சிறிய சபைகள் என்று எதுவும் இல்லை! எல்லா சபையும் தேவனுடைய பார்வையில் ‘ஒரே அளவுகொண்ட’ சபைகளேயாகும்” என பதில் கூறினார். விசுவாசிகளின் ஐக்கியம் சிறியதோ அல்லது பெரியதோ, அவர்கள் இயேசுவின் பிரசன்னத்தில் கூடி வந்து ஆராதித்தால், அந்த கூடுகை சிறிய சபையா? அல்லது பெரிய சபையா? என தேவன் வேறுபாடு பார்ப்பதில்லை!
ஆனால், இன்றைய ஜனங்களோ சபையிலுள்ள மக்களின் எண்ணிக்கையை தொகையிட்டுப் பார்க்கிறார்கள். இதுபோன்ற ஜனங்கள், முற்றிலும் மாம்ஷீக சிந்தை கொண்டவர்கள், ஆவிக்குரியவர்கள் அல்ல! இயேசுவின் நாமத்தில், அவரது பிரசன்னத்தில் கூடி வரும் எந்த சபையையும் தேவன் கண்டு “இதுவே, நான் தங்கும் வாசஸ்தலம்! நான் வழங்கும் அனைத்து ஈவுகளையும் என் பிரசன்னம் நாடிய ஒவ்வொரு சபையும் பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது!” என்றே தேவன் கூறுவார்.