பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

07.11.2024

45.  பின்னோக்கிப் பார்க்காத ‘தீவிரம்’ வேண்டும்!

  லகத்திற்கும், ஒத்தவேஷத்திற்கும் தீவிரமாய் பின்னோக்கிச் செல்லும் அநேக கிறிஸ்தவ சபைகளைப் பார்த்து, கடுகளவுகூட பின்வாங்காதிருக்க உறுதி கொண்டிருக்கக் கடவோம். இக்கொடிய நாட்களில், நாமோ ஆவியின் வல்லமையால் நிறைந்து: 

“இந்த பின்மாற்ற திசைக்கு நான் திரும்ப மாட்டேன்! மனமடிந்த கோழையாய் மாற மாட்டேன்!” என்றே நம் ஆண்டவரிடத்தில் சொல்ல வேண்டும்! அதை நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும்! அதை, இன்றைக்கே  சொல்ல வேண்டும்! நம் தோளின் மீது நாமே ஏறி நின்று பிசாசினிடத்தில் சொல்ல வேண்டும்! உத்தமமான கிறிஸ்துவின் சரீரமான சபை இப்படித்தான் இருக்க வேண்டும்! 

 தன் தீவிர ஓட்டத்தில் தளர்ந்து, உத்தம சபை உலகத்தின் வழிக்கு சென்றுவிடக்கூடாது! அல்லது, இன்றைய தரம் குறைந்த கிறிஸ்தவ ஊழிய வழிகளுக்கும் சென்றுவிடக்கூடாது! அவருடைய சரீரத்திலிருக்கும் உத்தமம் நிறைந்த விசுவாசிகள் “இந்த உலகத்தார் மதிப்பீடு செய்து நியாயந்தீர்க்கும் அளவை” தனக்குள்ளும் கொண்டு வந்து சமரசப்படுத்திக் கொள்ளக் கூடாது! கிறிஸ்துவின் ஆவியில் நிறைந்த அவருடைய சரீரம், நாம் புதிய ஏற்பாட்டின் தரத்தின்படி நிலைகொண்டிருப்பதைக் கண்டு அகமகிழ வேண்டும்! இந்த தரத்தின் மகிழ்ச்சி ஒன்றே ஓர் உத்தம ஸ்தல சபைக்கு, அவர்களின் முதுகெலும்பாய் இருக்க வேண்டும்!

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!