நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!
இன்றைய கிறிஸ்தவம், தன் நடக்கையில் சொற்பமாகவும், தங்கள் பேச்சில் நீண்டும் இருக்கிறார்கள்! பேச்சில் வலிமையாய் இருக்கிறார்கள், தங்கள் சொந்த கிரியையில் பெலவீனமாயிருக்கிறார்கள். மார்க்க சம்பந்தமான பேச்சுகளைப் பேசிவிட்டு, ஒரு முடிவை எடுக்கிறார்கள்! ஏனெனில், அதுதான் அவர்களுக்கு எளிதாயிருக்கிறது. கிரியைகள் செய்தோ, திருஷ்டாந்தமாய் நிற்பதோ, அதிக விலைக்கிரயம் கொண்டதாயிருக்கிறது. உங்கள் ஜெபத்தில் “ஆண்டவரே, என் சிலுவையை அனுதினமும் சுமந்து வர எனக்கு உதவிசெய்யும்” என ஜெபிப்பது எளிது! ஆனால் நிஜமாகவே சிலுவை எடுத்து, வாழ்வதுதான் கடினம். செயல்பாடு இல்லாத வார்த்தைகளை திரும்பத் திரும்ப பேசுவதில், ஒரு போலியான திருப்தியும் அடைகிறார்கள். இன்று மார்க்க தலைவர்கள் பெரும்பாலோர் உலக - மோக சமரசத்தில், குளிர்ந்த இருதயம் உள்ளவர்களாயிருக்கிறார்கள். அல்லது, பேசி பேசியே தலைகணம் பெற்று வாழ்கிறார்கள்! இதை எப்படி கூறலாம் என்றால் “தகுதியில்லாத ஜீவியம் செய்து கொண்டு..... பிறருக்கு தகுதியான ஜீவியத்தை போதிப்பதாயிருக்கிறது!”.
இன்று சபையின் தேவை, உபதேசத்தை நிமிர்த்துவது அல்ல! அப்படியெல்லாம் நிமிர்த்தி நிமிர்த்தி ‘பரிசேயத்துவத்தில்’ சபை சீரழிந்து உள்ளது. அது அல்ல..... தேவனைக் குறித்த தீராத தாகமும், ஆவிக்குரிய நீரோட்டமும் நிறைந்த சபையுமே நமது தேவையாயிருக்கிறது! இதுபோன்ற சபைகள், இன்று நம் மத்தியில் அபூர்வமாய் போய்விட்டது! தேவன்தான் நமக்கு உதவி செய்ய வேண்டும்!!