பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!


18.07.2024

29.  ‘அனல் குன்றா தெய்வ அன்பே’ நமக்கு வேண்டும்!


                

  யிர்த்தெழுந்த இயேசு, தன் சீஷர்களிடம் “புசிப்பதற்கு ஏதாகிலும் உண்டா?” என கேட்டார் (யோவான்21:5). இரவு முழுவதும் பிராயசப்பட்டும் “ஒன்றும் இல்லை!” என்றே நேர்மையாய் கூறினார்கள். அதற்குப் பிறகுதான், சோர்வுற்றிருந்த அவர்களை “வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்!” என இயேசு அழைத்தார். அங்கு “தணலில்” (FIRE) வைக்கப்பட்ட சூடான மீனையும், அப்பத்தையும் விருந்தாக அளித்தார்! (வச.9-13). யூதா குறிப்பிடும் ‘அன்பின் விருந்து’ பிறருக்கு அன்பை வழங்கும் “உங்கள் அன்பின் விருந்து” என்றே குறிப்பிட்டார் (யூதா:12). இயேசுவின் சீஷர்கள் தவிர, மற்ற எவரும் “கொடுப்பதே பாக்கியம்!” என்பதை அறிந்திருக்கவில்லை! குறிப்பாய் “அன்பை” பிறருக்கு விருந்தாக கொடுத்திடும் பாக்கியமே ஒப்பற்ற சிலாக்கியம்! 

 தணலான தெய்வீக அன்பு வேண்டும்! என பிரயாசப்படுகிறவர்கள் இன்று வெகு கொஞ்சம்! இன்று, அனேகருடைய ‘அனல் கொண்ட அன்பு’ கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துபோன நிலையே காணப்படுகிறது! “ஒருக்காலும் ஒழியாத செல்வமாகிய” அன்பிற்கு அவர்கள் பிரயாசப்பட்டிருந்தால், நலமாய் இருந்திருக்கும். அவ்வாறு பிரயாசப்பட்டவர்களே, எத்தனை வலை வீசியும் “ஒன்றும் இல்லை!” என்ற நேர்மையான பதில் கூறுவார்கள்!! அவரால் அன்றி, தங்களால் யாதும் கூடாது (யோவான்15:5) என்ற ஒப்பற்ற “வெறுமை இடமே” இயேசு அற்புதம் செய்யும் இடம்! அவர் வருவார், அவர்களின் தாகமுள்ள ஜெபம் கேட்பார்.... அவர்கள் இருதயத்தை ‘தெய்வ அன்பால்’ நிரம்பச் செய்து நடத்துவார்! (ரோமர்5:5).

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!