நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

26.02.2026 9வது வாரம்
புனித வெள்ளி ‘சிலுவை’ இல்லாமல், ஈஸ்டர் மகிழ்ச்சி இல்லை!

யாரையெல்லாம் தன் உயிர்த்தெழும் வல்லமையில் பங்குபெற தேவன் விரும்பினாரோ, அவர்களுக்கு யாதொரு இரக்கமும் பாராட்டாமல் ‘சிலுவையில் அறையப்படுவதற்கு’ தேவன் அளவில்லாமல் ஒப்புக்கொடுக்கிறார். நம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலுவையில் அறையப்பட்டு, நம்முடைய சுய ஜீவியம் அனைத்தும் அளவில்லாமல் மடிந்துபோய்.... அளவில்லாத தமது மகிமைக்கும் நித்திய நன்மைக்கும் நம்மை உயிர்த்தெழச் செய்ய விரும்புகிறார்!
ஆனால் இன்றைக்கோ, இயேசுவினிமித்தம் துன்பம் அடைவதற்குரிய மனவிருப்பம் சபையில் கொஞ்சம் கொஞ்சமாய் அற்றுப் போகத் தொடங்கியுள்ளது.
இந்த கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் ‘புனித வெள்ளியின்’ ஜீவியம் இல்லாமல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவது எவ்வாறு சாத்தியம் ஆகும்?
‘ஜெயமேயென’ உயிர்தெழுந்து, சபையில் தன் சகோதரர்கள் மத்தியிலே நமது மீட்பர் துதிபடுவதற்கு முன்பாக, தன் சகோதரர்கள் மத்தியில் பாடுபடுவதற்கே முதலாவது தலை வணங்கினார், என்ற ஆதி கிறிஸ்தவர்களின் உணர்வை, இன்றைய கிறிஸ்தவர்கள் இழந்து போனார்கள்!
- ரத்னம்
