பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
21.09.2023  

15. ‘கர்த்தருடைய உண்மையை’ நினைத்து மகிழுங்கள்! 

 
                                                            

தாங்கள் உணர்த்தப்படும் சிறு சிறு விஷயங்களில் தவறுவதினிமித்தம் துயரமடைகிறவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்! ஏனெனில் இவர்கள் மாத்திரமே தேற்றரவாளனாகிய பரிசுத்தாவியின் திவ்விய உதவியைப் பெறுவார்கள் (மத்.5:6). இத்தகைய நமது உண்மை, நம் ஜீவகாலமெல்லாம் “மரணபரியந்தம்” நம்மில் நிலைத்திருக்குமென்றால், தேவன் நமக்கு நிச்சயமாய் ஜீவகிரீடத்தைத் தருவார்! அல்லேலூயா!! ஆகிலும், “சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1தெச.5:23,24) என வாசிக்கிறோமல்லவா? அவர் துவக்கத்திலிருந்து முடிவுவரை உண்மையுள்ளராயிருந்து நம் ஆவி ஆத்துமா சரீரம், கிறிஸ்து திரும்ப வரும்வரை நம்மை குற்றமற்றவர்களாய் காத்துக்கொள்வார்! இந்த வசனங்களில் காணப்படும் மகா மேன்மையை நீங்கள் கருத்தாய் கவனித்தீர்களென்றே நம்புகிறேன். இப்போது சொல்லுங்கள்? யாருடைய உண்மை மகா மேன்மையுள்ளதாய் உங்களுக்குத் தோன்றுகிறது? துளி அளவு சந்தேகத்திற்கும் இடமில்லாமல், “அவருடைய உண்மையே” மகா மேன்மையுள்ளதாயிருக்கிறது! எவ்வளவுதான் விழிப்புடன் உண்மையுள்ளவர்களாய் ஜீவித்திட பிரயாசப்பட்டாலும், ஏதாகிலும் சில சறுக்குகள் ஏற்பட்டு....கிட்டத்தட்ட ஒவ்வொருநாளுமே துயரம் கொள்ளும் நாளாய் தங்களுக்கு இருப்பதை எல்லாப் பரிசுத்தவான்களும் அறிந்திருக்கிறார்கள்! ஆகவே, “நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்ததையா?” அல்லது “தேவன் உண்மையுள்ளவராய் இருந்ததையா?”..... இதில், எது மகா மேன்மையுள்ளது என நாம் கருதி மனம் மகிழ்ந்து கொண்டாட முடியும்? ஆம், நாம் யாவருமே சேர்ந்து, அவருடைய உண்மையை மாத்திரமே மகிழ்கொண்டாடிட விரும்புகிறோம்! 

- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!