பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே... அங்கே உங்கள் இருதயம் ! (மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை
பரலோக பொக்கிஷங்கள்
உங்கள் பொக்கிஷம் எங்கே...
அங்கே உங்கள் இருதயம் !
(மத் 6 : 21)
மதுரை கிறிஸ்தவ ஐக்கிய சபை

வாரத்தில் ஒரு தீபம்

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

image
19.05.2022

05. “ஊழிய அழைப்பு” குருவாகிய இயேசு தரும் பாக்கியம்!


ருவன், தன் வீட்டிலுள்ள அனைவரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வழி அனுப்பி விட்டு... தானும் நல்ல பென்ஷனோடு ‘ரிடையர்டு’ ஆகி... பின்பு உமக்கு தொண்டு செய்வேன்! என உத்தரவு கேட்டவனை இயேசு புறக்கணித்தார்! (லூக்.9:61). அவர்களை தேவராஜ்ய பணிக்கு “தகுதியற்றவர்கள்” என்றார். ஏனெனில், அவர்கள் எந்த நேரத்திலும், தங்கள் வீட்டு அலுவல்களுக்கு முதலிடம் கொடுத்து திரும்புவார்கள் என இயேசுவுக்குத் தெரியும்! ஆனால், இளமையான பேதுருவையும் மற்ற சீஷர்களையும் தன் பணிக்கு இயேசு அழைத்தவுடன், தங்களுக்குரிய லாபமான மீனையும், வலையையும், படகையும் அல்லது தன்னை ஆதரிக்கும் தந்தையையும் “உடனே விட்டுவிட்டு” வரும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். இவர்களே, அவருக்குச் சொந்தமான ஊழியர்கள்! இவர்களுக்கே குருவாகிய இயேசு, நல்ல ஊழிய பயிற்சியும் தருவார்! ‘தகப்பன் மரித்து அடக்கம் செய்திடும்’ நியாயமான அவனது கடமைக்கு கூட “வேறு சிலரை அனுப்பி” தன் தாசனை பூமிக்குரிய யாதொரு கவலையும் தாக்காதிருக்கச் செய்வார்! (லூக்.9:60). ஏதோ காரணங்களுக்காக, தேவனுடைய மந்தையை மேய்ப்பதற்கு தயங்கி, வேறு நாட்டம் ஏற்பட்டால், உடனே பேதுருவிடம் கூறியதைப் போலவே “இவைகளைப் பார்க்கிலும் என்னை நேசிப்பாயாக!” என திருத்துவார்! (யோ.21:17). இவ்வாறு குருவும், அவரது ஊழியனுமாய், இணைபிரியா உடன்படிக்கையில் பணி செய்யும் வேலையாட்கள் எங்கேயோ..... அங்கே தேவனுடைய பணி சிறக்கும்! அவரது நாமம் மகிமைப்படும்!!   


- ரத்னம்

வாரத்தில் ஒரு தீபம்!

நாட்களை விசேஷிப்பது போல, வாரத்தின் முதல் நாளை விசேஷித்து ஒளிசிந்தும் பக்கம்!
இந்த தீபத்தின் செய்தி ஒவ்வொரு வியாழகிழமை வெளிவரும்...... இந்த செய்தி, அந்த வாரம் முழுவதும், உங்களை புத்தொளி சுடரில் நடத்துவதற்கு உதவியாய், மனதில் பதியும் சித்திரத்தோடு வெளிவருகிறது!

ஆகஸ்ட்

  • 08. இயேசுவுக்கே புகழ்சேர்க்கும் எழுப்புதல் வேண்டும்!